தக் லைப் வச்சி தப்பு கணக்குப்போட்ட சிம்பு!.. எல்லாம் ஒன்னுமில்லாம போச்சே!...

by MURUGAN |
thug life simbu
X

Actor simbu: சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. நன்றாக நடிப்பார், நன்றாக நடனம் ஆடுவார், நன்றாக பாட்டு பாடுவார். சினிமாவில் இவருக்கு பல விஷயங்கள் தெரியும். அவ்வப்போது ஹிட் கொடுத்தாலும் நடிப்பதில் நிறைய இடைவெளியும் விடுவார். அதோடு ஷூட்டிங்கிற்கு சரியாக போகாமல் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கதற விடுவார்.

அதனால்தான் சிம்புவுக்கு பின்னால் நடிக்க வந்த தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் அவரை தாண்டி போய்விட்டார்கள். சிம்பு மீது பல இயக்குனர்கள் புகார் கூறியிருக்கிறார்கள். சில தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், அவ்வப்போது ஹிட் படங்களை கொடுப்பதால் சிம்புவின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

சிம்புவுக்கு கடைசியாக வெற்றிப்படமாக அமைந்தது மாநாடு. இந்த படம் வந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படம் 90 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தில் வெறும் 8 கோடியை சம்பளமாக வாங்கினார் சிம்பு. மாநாடு ஹிட் அடிக்கவே சம்பளத்தை 15 கோடியாக ஏற்றி வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்தார். அந்த 2 படங்களும் ஓடவில்லை.


அதன்பின் 2 வருடங்கள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படம் வெளியாகியுள்ளது. பெரிய இயக்குனர், பெரிய படம், இந்த படம் வெளியானால் நம்ம ரேஞ்ச் மாறிவிடும். சம்பளத்தை ஏற்றிவிடலாம் என கணக்குப்போட்டிருந்தார். எனவே, தொடர்ச்சியாக அவர் புக் செய்து வைத்திருந்த படங்களில் தனது சம்பளம் இதுதான் என அவர் சொல்லவில்லை.

அட்வான்ஸ் மட்டும் கொடுங்கள். தக் லைப் ரிலீஸுக்கு பின் சம்பளத்தை பேசிக்கொள்வோம் என சொல்லிவிட்டார். ஆனால், தக் லைப் படத்தின் ரிசல்ட்டோ வேறுமாதிரி அமைந்துவிட்டது. எனவே, சம்பளத்தை ஏற்ற முடியாமல் அமைதியாகி விட்டார் என சிலர் சொல்கிறார்கள். சிலரோ படம் தோற்றாலும் சரி.. வெற்றி பெற்றாலும் சரி.. ஹீரோக்கள் சொல்வதுதான் சம்பளம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ஒருபக்கம், பார்க்கிங் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கவிருந்த படம் டிராப் ஆகிவிட்டதால் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க துவங்கிவிட்டார் சிம்பு. இந்த படம் வட சென்னை பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

Next Story