சிம்பு லைன் அப்பில் ஏற்பட்ட மாற்றம்!.,. அந்த இயக்குனருக்கு ஓவர் முன்னுரிமையா இருக்கே?..

by Ramya |
simbu
X

Actor Simbu: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த சிம்பு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி தற்போது தான் மீண்டு இருக்கின்றார். சினிமாவில் மாநாடு திரைப்படத்தின் மூலமாக தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கினார்.

தொடங்கிய வேகத்தில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னேறி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடைபெறாமல் இருந்து வருகின்றது. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு, பத்து தல என இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை கொடுத்தது.


அதனையடுத்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அப்படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியானதே தவிர படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. பின்னர் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரிக்கவில்லை என்று அறிவித்துவிட்டார்.

இதற்கு இடையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் என்றாலும், மெயின் ஹீரோவாக கமல்ஹாசன் நடிப்பதால் இது சிம்புவின் லிஸ்டில் வராது.

அடுத்தடுத்த இயக்குனர்களின் திரைப்படங்களில் கமிட்டானாலும் படம் தொடர்பான அப்டேட் பெரிய அளவில் வெளிவரவில்லை. சமீபத்தில் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பும் இன்னும் தொடங்கவில்லை. இதற்கிடையில் பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இது தொடர்பான அறிவிப்பு முன்னரே வெளியாகி இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் தான் நடிகர் சிம்பு முதலில் நடிக்க இருக்கின்றார்.


அதன் பிறகு இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் கமிட்டான திரைப்படத்தை முடித்துவிட்டு அதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகயிருக்கின்றது. பார்க்கிங் பட இயக்குனருடன் சிம்பு இணையும் திரைப்படம் விரைவில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு கேட்ட தொகையை சம்பளமாக கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

Next Story