Connect with us
actor

Cinema News

நான் லண்டன்ல இருக்கேன்!.. சீன் போட்டு வாய்ப்புகளை இழக்கும் வாரிசு நடிகர்….

தமிழில் பல ஒருதலைக்காதல் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தை பதம் பார்த்தவர் அந்த நடிகர். சில வருடங்களுக்கு முன்பு மாரடைப்பில் மரணமடைந்தார். அதன்பின் அவரின் மகன் சினிமாவில் நடிக்கவந்தார். திறமையான நடிகர்தான். நன்றாக நடனம் ஆடுவார். சண்டை போடுவார். ஆனாலும், அவரை அதிக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

அதற்கு காரணமும் அவர்தான் என்பது தெரிய வந்துள்ளது. தயாரிப்பாளர்கள் அவரை சுலபமாக ரீச் செய்ய முடியாத அளவுக்கு இருக்கிறாராம்.

யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை. எப்படியாவது அவரை தொடர்பு கொண்டு தயாரிப்பாளர்கள் பேசினால் ‘நான் அடுத்த வாரம் ஃபாரன் போறேன்..சென்னை திரும்பிய பின் உங்களிடம் பேசுகிறேன்’ என எல்லோரிடமும், எப்போதும் கூறுகிறாராம். இதனாலேயே பட வாய்ப்புகளை அவர் இழந்து வருகிறாராம். வாய்ப்பு கிடைக்காமல் பலர் தயாரிப்பாளர் அலுவலகத்தில் ஏறி, இறங்கி வரும் நிலையில் இந்த வாரிசு நடிகர் இப்படி இருக்கிறார்.

ஒருபக்கம் ‘ஒரு மனுஷன் வருஷத்துல 360 நாட்களும் வெளிநாட்டிலா இருப்பார்?’ என சிரிக்கிறது சினிமா வட்டாரம்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top