சிம்பு மாதிரி எஸ்.கே. இல்ல!.. என்னை கூப்பிட மாட்டார்!.. பன்ச் வைத்த சூரி!...

Actor soori: காமெடி நடிகராக இருந்த சூரி இப்போது கதையின் நாயகனாக மாறிவிட்டார். பரோட்டோ சூரியாக இருந்தவர் இப்போது ஹீரோ சூரியாக மாறிவிட்டார். விடுதலை படம் மூலம் சூரியை வேறொரு பரிமாணத்தில் வெற்றிமாறன் காட்டிவிட்டார். அந்த படமும் ஓடிவிட்டதால் சூரியின் இமேஜும் மாறிவிட்டது.
விடுதலை படத்தில் நடித்த போது ‘வருடத்திற்கு ஒரு படத்தில் ஹீரோ, இரண்டு படங்களில் காமெடி’ என நடியுங்கள் என வெற்றிமாறனே சூரியிடம் சொன்னார். ஆனால், படம் ஹிட்டான பின் சூரி இனிமேல் நீங்கள் நினைத்தாலும் காமெடி பண்ண முடியாது என வெற்றிமாறனே சொல்லியிருக்கிறார். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
விடுதலை படத்திற்கு பின் விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி போன்ற படங்கள் வெளியானது. இதில் எல்லாம் சூரிக்கு சீரியஸான வேடங்கள்தான். இப்போது மாமன் படமும் குடும்ப செண்டிமெண்ட் படமாகவே வெளியாகி நல்ல வசூலை பெற்றிருக்கிறது. இந்த படத்தோடு சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் வெளியானது.
ஆனால், அந்த படத்தை விட மாமன் படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது. எனவே, ரசிகர்களுக்கு தொடர்ந்து நன்றி சொல்லி வருகிறார் சூரி. மேலும், விடுதலை படத்திற்கு பின் என்னை காமெடி படத்தில் நடிக்க யாரும் அழைக்கவில்லை எனவும் சொல்லியிருந்தார். அதேநேரம், ஹீரோவாக நடித்து வந்த சந்தானம் சிம்புவின் புதிய படத்தில் அவருடன் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
இந்நிலையில், ‘சிம்புவுக்காக காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். சிவகார்த்திகேயனுக்காக நீங்களும் நடிப்பீர்களா?’ என சூரியிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் சொன்ன சூரி ‘நானே சரி என சொன்னாலும் தம்பி கூப்பிடமாட்டார். அண்ணா நாம் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால் இருவருக்கும் சரியான கதாபத்திரம் அமைந்தால் மட்டுமே பண்ணனும்’ என சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு கதை அமைந்தால் நாங்கள் கண்டிப்பாக பண்ணுவோம்’ என சொல்லியிருக்கிறார்.
சிம்பு படத்தில் சந்தானத்திற்கும் நல்ல வேடம் என்றே சொல்லப்படுகிறது. அதனால்தான் அவரும் நடிக்க ஒப்புகொண்டிருக்கிறார். அடுத்து ஹீரோவாக 3 படங்களில் நடிக்க விருக்கிறார். மேலும், ஆர்யாவுடன் இணைந்தும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல், சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள மண்டாடி படம் அடுத்து திரைக்கு வரவிருக்கிறது.