ஆக்ஷன் எல்லாம் வேணாம்பா.. சூரியின் புது ரூட்.. அடுத்த படத்தின் டைட்டிலே அள்ளுதே!..

by Ramya |
maman
X

maman 

நடிகர் சூரி:

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சூரி. படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக மாறினார். அதிலும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காம்போவில் வெளிவந்த பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டு கொடுத்துள்ளது.

ஹீரோ அவதாரம்:

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி தற்போது நடிகராக அவதாரம் எடுத்திருக்கின்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவருக்குள் இருந்த ஹீரோ வெளிவந்திருக்கின்றார். விடுதலை திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகச் சிறப்பாக நடித்து பிரபலமானார் சூரி.


இந்த திரைப்படத்தை தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி என்ற இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விடுதலை 2 திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரியை காட்டிலும் விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் இந்த திரைப்படத்தில் ஒரு கதாநாயகனாக சூரி நடித்திருக்கின்றார். இப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார் நடிகர் சூரி. இவர் நடிப்பில் தற்போது ஏழு கடல் ஏழுமலை என்கின்ற படம் உருவாகி இருக்கின்றது.

இந்த திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி காமெடி நடிகரிலிருந்து முன்னணி ஹீரோவாக உயர்ந்து வருகின்றார் நடிகர் சூரி.

புதிய திரைப்படம்:

நடிகர் சூரி தற்போது விலங்கு வெப் சீரியஸை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் என்கின்ற தகவல் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறி வந்தார்கள்.


இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கின்றது. இப்படத்திற்கு மாமன் என்கின்ற பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சூரி ஒரு செண்டிமெண்ட் கதையில் நடிக்க இருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தின் பூஜையில் நடிகர் சூரியும், ஐஸ்வர்யா லட்சுமியும் கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Next Story