தியேட்டரில் கேப் விடாம விசில் பறக்கப்போகுது!.. குட் பேட் அக்லி சூப்பர் அப்டேட்!...
ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் அஜித் நடித்து உருவாகி வரும் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் தாமதமாகி கொண்டே போனதால் அஜித் நடிக்க துவங்கிய படம் இது. பொதுவாக அஜித் ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படம் பற்றி யோசிப்பார். ஆனால், வருடக்கணக்கில் விடாமுயற்சி இழுத்துகொண்டே போனதால் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
எனவே, விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நடந்து வந்தது. காலை முதல் மாலை வரை விடாமுயற்சியில் நடித்துவிட்டு 7 மணிக்கு மேல் குட் பேட் அக்லி படத்தில் நடித்தார் அஜித். அதற்கு காரணம் குட் பேட் அக்லி படத்தில் நிறைய இரவு காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
இந்த படத்தை இயக்கி வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் திரிஷா இல்லன்னா நயன்தாரா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பின் சில படங்களை இயக்கினார். ஆனால், அந்த படங்கள் தேறவில்லை. ஆனால், விஷால் - எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ஆதிக் இயக்கிய மார்க் ஆண்டனி படம் வசூலில் சக்கை போடு போட்டது.
இந்த படத்தின் வெற்றிதான் அவரின் இயக்கத்தில் அஜித் நடிக்க காரணமாக அமைந்தது. அதோடு, நேருக்கு நேர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தபோது ஆதிக்கிற்கும் அஜித்துக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது ஆதிக் சொன்ன கதை பிடித்துப்போக நடிக்க சம்மதித்தார் அஜித்.
இப்போது விடாமுயற்சி படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெனிஸ் நகருக்கு படக்குழு பறந்திருக்கிறது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார்.
இவரிட்ம் ஒரு மாதம் கால்ஷீட் வாங்கியிருக்கிறது படக்குழு. படம் முழுக்க அஜித்தை பில்டப் செய்து பேசும் கதாபாத்திரம் இவருக்கு. இவர் வசனம் பேசும் காட்சிகளில் அஜித் ரசிகர்கள் விசில் அடித்து என்ஜாய் செய்வார்கள் என சொல்கிறது படக்குழு. அதோடு, எப்படியும் அஜித் புரமோஷனுக்கு வரமாட்டார் என்பதால் தெலுங்கு புராமோஷனுக்கு சுனிலை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.