ஜோதிகாவுடன் 50வது பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா!. செம ரொமான்ஸ் போட்டோ!...

Suriya birthday: ஜோதிகாவுடன் பல படங்களிலும் நடித்ததால் அவருக்கும் சூர்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதேநேரம், சூர்யாவின் அப்பா சிவக்குமார் மகனின் காதலை ஏற்கவில்லை. தனது சமூகத்தில் ஒருவரை சூர்யாவுக்கு திருமணம் செய்து வைக்கவே அவர் ஆசைப்பட்டார். ஆனால், சூர்யா உறுதியாக இருந்ததால் சம்மதம் சொன்னார். அப்பாவின் சம்மதத்திற்காக சில வருடங்கள் காத்திருந்தார் சூர்யா.
திருமணத்திற்கு பின் சில வருடங்கள் ஜோதிகா சினிமாவில் நடிக்கவில்லை. இவர்களுக்கு ஒரு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது சொந்த ஊர் மும்பை என்றாலும் கணவருக்காக மாமனார் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்தார் ஜோதிகா. குழந்தைகள் இருவரும் சென்னையிலேயே படித்தனர்.

36 வயதினிலே படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். டூயட் பாடும் கதாநாயகியாக இல்லாமல் அழுத்தமான பெண் கதபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்து வெளியான 36 வயதினிலே, ராட்சசி, நாச்சியார், பொன்மகள் வந்தாள், காற்றின் மொழி, உடன் பிறப்பு போன்ற படங்கள் வரவேற்பை பெற்றது.
தற்போது கணவர் சூர்யாவுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். மேலும், சூர்யாவை ஹிந்தி படங்களில் நடிக்க வைக்கவும் அவர் முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் 2 நாட்கள் கோவாவில் நடைபெறுகிறது. இதில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டார்கள். சூர்யாவின் தம்பி கார்த்தியும் அங்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், சூர்யா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள கருப்பு படத்தின் புது போஸ்டர் நேற்று வெளியானது. மேலும், இன்று காலை 10 மணிக்கு கருப்பு படத்தின் டீசர் வீடியோவும் வெளியாகவுள்ளது.