Suriya47: மீண்டும் காக்கி சட்டை போடும் சூர்யா!... ஆனா இது வேற!.. பரபர அப்டேட்!...

சூர்யாவிற்கு அதிரடி ஆக்சன் படங்கள் கை கொடுத்த அளவுக்கு மற்ற கதைகள் கை கொடுக்கவில்லை என்று சொல்லலாம். சிங்கம் 2-வுக்கு பின் சூர்யாவுக்கு ஒரு சூப்பர்ஹிட் படம் அமையவில்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த படம் வெளியான பின் ரசிகர்களை கவரவில்லை. எனவே அப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. அதன்பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ படமும் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது.
ஒருபக்கம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ஜனரஞ்சகமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது ஆர்.ஜே பாலாஜிக்கே தெரியவில்லை. இந்த படத்தின் ஓடிடி உரிமை இதுவரை விற்கப்படவில்லை. அநேகமாக 2026 ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்கிறார்கள்.
தற்போது சூர்யா லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இது அவரின் 47வது திரைப்படமாகும். இந்த படத்தில் பகத் பாஸில் மற்றும் அவரின் மனைவி நஷ்ரியா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடக்கவிருப்பது தெரியவந்திருக்கிறது.
சூர்யா ஏற்கனவே சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய ஆகிய படங்களில் போலீசாக நடித்திருக்கிறார். இந்த படங்கள்தான் அவரை வெகுஜன மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அதேநேரம் மலையாளத்தில் ஹரியை போல படம் எடுக்க மாட்டார்கள். அவர்கள் போலீஸை வேறு மாதிரி காட்டுவார்கள். எனவே சூர்யாவுக்கே இது புது அனுபவமாக இருக்கும். அதோடு, சூர்யாவை வேறு மாதிரியான போலீசாக ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.