அஜித் வருவார்னு பார்த்தா சூர்யா வராரே!.. ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி இதோ!..
Actor Suriya: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தில் மெனக்கட்டு நடித்து வந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
ஆனால் படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் படம் படுதோல்வியை அடைந்தது. சூர்யாவின் கெரியரிலேயே ஒரு முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படத்தின் தோல்வி சூர்யாவையும் பாதித்திருக்கின்றது. இருப்பினும் அடுத்தடுத்த திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகின்றார் நடிகர் சூர்யா.
கங்குவா படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்கின்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அஜித்தின் பிறந்தநாள் ஆன மே 1ம் தேதி அவரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த திரைப்படத்தை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி கோடை விடுமுறையை குறி வைத்து இறங்குகிறது. மாணவர்கள் தேர்வு முடிந்து விடுமுறையில் இருக்கும் நிலையில் படத்தை வெளியிட்டால் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கு இடையில் ரசிகர்கள் ஒரு அன்பான வேண்டுகோளையும் வைத்து வருகிறார்கள்.
கங்குவா திரைப்படத்திற்கு புரமோஷன் என்கின்ற பெயரில் ஓவராக வாயை விட்டு மாட்டிக்கொண்டது போல் இல்லாமல் இந்த முறை கொஞ்சம் அடக்கி வாசித்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கும் நிலையில் அடுத்ததாக எந்த திரைப்படம் சூர்யா திரைப்படத்துடன் மோத போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.