கருப்பு படத்தில் இவ்வளவு பிரச்சனையா?… இது என்னடா சூர்யாவுக்கு வந்த சோதனை!..
Karuppu: நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே சோதனை காலமாகவே இருக்கிறது. அவர் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா திரைப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்ததால் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தது. அந்த படத்திற்காக கடுமையான உழைப்பை கொட்டியிருந்தார் சூர்யா. ஆனால் படம் தோல்வியை சந்தித்தது.
அடுத்து அவர் நடித்த ரெட்ரோ படமும் மெகா ஹிட் அடிக்கவில்லை. அந்த படத்திற்குப் பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் வழக்கறிஞர் மற்றும் கருப்புசாமி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களிலும் சூர்யா நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒரு ஜனரஞ்சகமான கமர்சியல் மசாலா திரைப்படமாக கருப்பு உருவாகி இருப்பது டீசரை பார்த்தாலே தெரிந்தது.
ஆனால் இந்த படம் எப்போது வெளியாகும் என்பது தயாரிப்பாளருக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு கருப்பு படம் பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறது. இப்படத்தை சூர்யாவின் உறவினர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரபு தயாரித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே அவருக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கும் செட் ஆகவில்லை. கோபமடைந்த ஆர்.ஜே.பாலாஜி சில நாட்கள் ஷீட்டிங்கை நிறுத்தியதாகவும் செய்திகள் வெளியானது.
இப்படத்திற்கு இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ஷுட்டிங் நடத்துவதற்கு தேவையான பணத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுக்கவில்லை என்கிறார்கள். பணத்தை ரெடி செய்து செட் ஒர்க் மட்டும் மற்ற வேலைகளை முடித்து ஷூட்டிங் வைத்தால் சம்பளம் தராத காரணத்தால் திரிஷாவும் சரியாக ஷூட்டிங் வருவதில்லையாம். ஒரு பக்கம் இப்படத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 40 நாட்களுக்கும் மேல் சம்பள பாக்கி என சொல்லப்படுகிறது.
அதோடு ஒடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமங்களும் இன்னமும் விற்கப்படவில்லை. எனவேதான் படத்தை முடிக்க முடியாமலும் ரிலீஸ் தேதியையும் சொல்ல முடியாமலும் தயாரிப்பு நிறுவனம் தவித்து வருகிறது. இந்த வருடத்திற்கான படங்கள் அனைத்தையும் ஓடிடி நிறுவனங்கள் லாக் செய்து விட்டதால் கருப்பு திரைப்படம் அடுத்த வருடம்தான் ரிலீஸ் என்கிறார்கள்.
கருப்பு திரைப்படம் தடைபட்டு நிற்பதால் அதே நிறுவனம் தயாரிப்பில் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் மார்சல் படத்தின் படப்பிடிப்பும் தள்ளிப் போய்க் கொண்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் கார்த்தியை வைத்து தயாரித்துள்ள சர்தார் 2 படத்தின் ஓடிடி உரிமையும் இன்னமும் விற்கப்படவில்லை. இப்படி பல பிரச்சினைகளால்தான் கருப்பு, சர்தார் 2 ஆகிய படங்களில் ரிலீஸ் செய்தியை இன்னும் சொல்லாமல் இருக்கிறார்கள். ஒருபக்கம் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போய்விட்டார் சூர்யா.
