என் நெஞ்சில் குடியிருக்கும் என் தலைவா... 7 மணிநேரம் விஜய்க்காக தாடி பாலாஜி செய்த தியாகம்

by Murugan |   ( Updated:2024-12-28 08:50:13  )
thadi balaji
X

நடிகர் தாடி பாலாஜி விஜயின் த.வெ.க. கட்சியில் இணைந்ததில் இருந்தே பேசுபொருளாக ஆகி விட்டார். முதலில் விஜயின் கட்சி செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் கால்களில் விழுந்தார். கட்சியில் இணையும் அந்த நேரம் பரபரப்புக்குள்ளானார். காலில் விழும் கலாச்சாரத்தை வெறுக்கும் விஜயின் கட்சியிலேயே இப்படி நடக்கிறதே என்று பேசினார்கள்.

அந்த வகையில் அவருக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லாததால் தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றார்கள். ஆனால் அவர் தற்போது விஜய் 69ல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் சமீபத்தில் அவரது நெஞ்சில் விஜயின் உருவத்தைப் பச்சைக் குத்தியுள்ளார். இதுகுறித்து அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா...

கிட்டத்தட்ட 7 மணி நேரம் வலியைத் தாங்கிக்கிட்டு விஜய்க்காக இருந்துருக்கீங்க. சாரோட டாட்டூவைப் போடும்போது ரொம்ப வலியை தாங்கி இருப்பீங்க. எப்படி இருந்தது இந்த அனுபவம் என்று கேட்கிறார் நிருபர் ஒருவர். அதற்கு தாடி பாலாஜி சொன்ன பதில் இதுதான்.

வலியைத் தாண்டி ஒரு சந்தோஷம். என்; நண்பர், த.வெ.க.வின் தலைவர் போட்டோவை நெஞ்சில் குத்திய இருக்கோம் என்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. என் நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் தலைவா என்று விஜயின் டாட்டூவுக்குக் கீழ் எழுதப்பட்டுள்ளது.

விஜய் இதைக் கேள்விப்பட்டுப் பார்க்க வரச் சொன்னால் போய்ப் பார்ப்பேன். இப்ப இருக்குற வலி, அவர் கூட நிக்கும்போது தெரியாது. இதைப் பார்த்தாருன்னா 'அழகா இருக்கு. எப்படி... எங்கே போட்டீங்க'ன்னு கேட்பாரு. அதைத் தாண்டி 'இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கணுமா'ன்னு கேட்பாரு.

சும்மா சட்டையில போட்டுக் கழட்டிட்டு வேற சட்டைப் போட்டுக்கறது. சட்டையில அவரோடஉருவத்தை நிறைய பேரு குத்துறாங்க. அதைத் தாண்டி ஒரு யுனிக்கா டிபரன்டா இருக்கணும்னு நினைச்சேன்.


எங்க ஹார்ட்டோட இருக்கணும்னு நினைக்கிறேன். முதல்ல மகளோட பேரைக் குத்தியிருக்கேன். இந்தப் பக்கம் வீட்ல அவங்களோட பேரைக் குத்திருக்கேன். அப்ப இருந்த சந்தோஷம் வேற. இப்ப பயங்கர சந்தோஷம் என்கிறார் தாடி பாலாஜி.

பச்சைக்குத்திக் கொள்வது அந்தக் காலத்தில் கலாச்சாரமாக இருந்தது. அதை தற்போது நவீன பாணியில் டாட்டூஸ் என்ற பெயரில் அழைக்கிறார்கள். இது நவநாகரீக கலாச்சாரம் என்று சொல்லி பழைய கலாச்சாரத்தை வெறுப்பவர்கள் இந்த விஷயத்தில் மட்டும் பழைய பாணியை இந்த விஷயத்தில் கடைபிடிப்பது ஏனோ?

Next Story