Vadivelu: விதவிதமா கார் வாங்கி குவிக்கும் வடிவேலு!.. சம்பளத்தையும் இப்படி ஏத்திட்டாரே!…
கவுண்டமணி செந்திலுக்கு பின் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக விளங்கியவர் வடிவேலு, மதுரையிலிருந்து சினிமா வாய்ப்பை தேடி சென்னை வந்து துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறி பல வருடங்கள் மக்களை சிரிக்க வைத்தவர் இவர். வடிவேலுவின் காமெடிக்கென பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இவரின் ரசிகர்களாக இருக்கிறார்கள். இப்போதும் தொலைக்காட்சிகளில் இவரின் காமெடி காட்சிகளை மக்கள் ரசித்து பார்க்கிறார்கள்.
சந்திரமுகி, வின்னர், கிரி, தலைநகரம் உள்ளிட்ட பல படங்களில் இவரின் காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது. எல்லோர் வீட்டின் ரேஷன் கார்டில் என் பெயர் இல்லையே தவிர எல்லோரின் குடும்பத்திலும் நான் இருக்கிறேன் என வடிவேலு நெகிழ்ந்து பேசி இருக்கிறார்.
இடையில் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு அதன் பின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். ஹீரோவாக நடித்த படங்கள் கை கொடுக்காத நிலையில் மீண்டும் காமெடி நடிகராக நடிக்க துவங்கினார். ஒரு பக்கம் மாமன்னன் மற்றும் மாரீசன் போன்ற திரைப்படங்களில் குணசத்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். முன்பெல்லாம் தினமும் இவ்வளவு லட்சம் என சம்பளம் வாங்கி வந்த வடிவேலு தற்போது மொத்தமாக எனக்கு சம்பளமக 7 கோடி கொடுத்து விடுங்கள்.. 8 கோடி கொடுத்து விடுங்கள் என கேட்கிறாராம். அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
வடிவேலுவுக்கு புதிதாக மார்க்கெட்டில் வரும் விதவிதமான விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் உண்டாம். ஏற்கனவே நிறைய கார்களை வாங்கி வைத்திருக்கிறார். சினிமாவில் விலை உயர்ந்த காரில் வருவது ஒரு கௌரவம் என்பதால் மேலும் பல கார்களை வாங்கவே அவர் இப்படி அதிகமாகவும், மொத்தமாகவும் சம்பளம் கேட்கிறார் என சொல்லப்படுகிறது.
காமெடி நடிகர் கவுண்டமணியும் இப்படித்தான் கார்களின் மீது அதிக பிரியம் கொண்டவர். அவரிடமும் பல விலை உயர்ந்த கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
