நீங்கதான் என் கடவுள்!.. நீங்க இல்லாம நான் இல்ல!.. வடிவேலு வெளியிட்ட வீடியோ…
Vadivelu: கோலிவுட்டில் பல வருடங்களாக காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் வடிவேலு. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இவரின் நகைச்சுவைக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த வடிவேலு ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். கவுண்டமணி ஓய்வு பெற்றதால் வடிவேலுக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. அவரும் தனது நகைச்சுவை திறனை பயன்படுத்தி ரசிகர்களை பல வருடங்கள் சிரிக்க வைத்தார்.
வின்னர், கிரி, சந்திரமுகி, தலைநகரம் உள்ளிட்ட பல படங்களிலும் வடிவேலுவின் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேநேரம் சில காரணங்களுக்காக வடிவேலுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டு நான்கு வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன்பின் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்கிற திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
ஆனால் அந்த படம் ஓடவில்லை. இனிமேல் ஹீரோவாக நடித்தால் வொர்க் அவுட் ஆகாது என்பதை புரிந்து கொண்ட வடிவேலு தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர வேங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் பகத் பாஸிலுடன் இணைந்து நடித்த மாரீசன் படத்திலு இவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.
தற்போது பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். செப்டம்பர் 12ம் தேதியான இன்று அவரின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். எனவே இதற்கு நன்றி சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் வடிவேலு.
அதில் ‘எனது பிறந்த நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எனக்கு வாழ்த்து சொல்லி வருகிறீர்கள். இந்த வாழ்த்து என் தாய், குலசாமியை விட சக்தி வாய்ந்ததாக நான் கருதுகிறேன். ரசிகர்கள்தான் என் தெய்வம். மக்கள்தான் என் கடவுள். இப்போதும் நான் சினிமா துறையில் ஜொலிக்கிறேன் எனில் அதற்கு ரசிகர்கள் மட்டுமே காரணம். இந்த வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் நன்றி. உங்களின் வாழ்த்தும், ஆசிர்வாதமும் இன்று மட்டுமல்ல.. என்றுமே எனக்கு வேண்டும்’ என அதில் பேசியிருக்கிறார்.
நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை!
— UpdateNews360Tamil (@updatenewstamil) September 12, 2025
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் வடிவேலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் வடிவேலு வீடியோ.#UpdateNews | #Kollywood | #Vadivelu| #cinima | #HBDVadivelu | #LatestNews |… pic.twitter.com/tUDE9cb6zh
