சிரமத்துக்கு வருந்துகிறேன்!.. திடீரென பதிவு வெளியிட்ட விஜய் ஆண்டனி.. இதுதான் விஷயமா?..
விஜய் ஆண்டனி: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது நடிகராக அசத்தி வருகிறார். முதன் முதலாக சுக்கிரன் என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தனது முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய சிறந்த இசையால் பலரையும் கவர்ந்தார். தொடர்ந்து டிஷ்யூம், இருவர் மட்டும், பந்தயம், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார்.
நடிகர் அவதாரம்: தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வந்த இவர் நான் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த விஜய் ஆண்டனி அடுத்து அடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
தொடர் தோல்வி: ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வந்த விஜய் ஆண்டனிக்கு கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த திரைப்படங்கள் தோல்வியை கொடுத்து வருகின்றது. அந்த வகையில் இவர் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியானது.
மூன்று படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத விஜய் ஆண்டனி தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். தற்போது தனது கைவசம் கங்கன மார்க்கன் மற்றும் அக்னி சிறகு இந்த இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார்.
கான்செர்ட் நிகழ்ச்சி: தமிழ் சினிமாவில் தற்போது பல இசையமைப்பாளர்கள் லைவ் கான்செர்ட் நடத்தி வருகிறார்கள். ஏ ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ், இளையராஜா, இமான், ஹிப் ஹாப் ஆதி, அனிருத் என பல இசையமைப்பாளர்கள் தொடர்ந்து லைவ் கான்செர்ட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் ஆண்டனியும் தான் ஒரு இசையமைப்பாளர் என்பதை நினைவுபடுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கின்றார் .
இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கின்றது. அந்த வகையில் இன்று விஜய் ஆண்டனி 3.0 லைவ் கான்செர்ட் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முடிவு செய்திருந்தார். சென்னையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார் விஜய் ஆண்டனி. இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
திடீரென்று அதிலும் கடைசி நிமிடத்தில் இப்படி நிகழ்ச்சியை மாற்றுவதாக அறிவித்ததால் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்ததாவது "வணக்கம் நண்பர்களே.. சில எதிர்பாராத காரணங்களாலும், தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் பேரில் இன்று நடக்க இருந்த விஜய் ஆண்டனி 3.0 லைவ் கான்செர்ட் வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வின் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி.. புதிய நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக இருக்கும்' என்று கூறி இருக்கின்றார்.