கீர்த்தி சுரேஷுடன் பொங்கல் கொண்டாடிய விஜய்!. இவரே தீனி போட்டா எப்படி?!...

by Murugan |   ( Updated:2025-01-14 10:17:42  )
vijay
X

Actor vijay: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். 200 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியாகி ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும்.

தளபதி 69:இந்த படத்தில் விஜயுடன் மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். வில்லனாக அனிமல், கங்குவா போன்ற படங்களில் வில்லனாக நடித்த பாபி தியோல் நடித்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் இது அவரின் கடைசிப்படம் என கருதப்படுகிறது.


அதேநேரம், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனில் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் என்றும் சிலர் சொல்கிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்துவிட்டாலும் அவர் மீது பல சர்ச்சைகள் இருக்கிறது. விஜயின் மனைவி மற்றும் குழந்தைகள் லண்டனில் வசிக்க விஜய் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ்: அதோடு, நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரோடு அவரை தொடர்புபடுத்தியும் கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால், கீர்த்தி சுரேஷ் தனது பல வருட நண்பர் ஆண்டனியை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து திருமணம் செய்து கொண்டார். மழையால் மக்கள் பாதிக்கப்பட்ட போது போகாத விஜய் கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக திரிஷாவுடன் தனி விமானத்தில் கோவாவுக்கு போனது சர்ச்சையை ஏற்படுத்தியது.


ஆனால், வழக்கம்போல் விஜய் அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான், கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் நிகழ்வில் விஜய் கலந்து கொண்டு சர்ப்பரைஸ் கொடுத்திருக்கிறார். இந்த விழாவில் கீர்த்தி சுரேஷ், அவரின் கணவர் ஆண்டனி, நடிகர் கதிர், மாநாடு படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் கலந்துகொண்டனர். ரூட் தயாரிப்பு நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய் மீது சர்ச்சைகள் இருக்கும் சூழ்நிலையில் விஜய் மீண்டும் தீனி போட்டிருக்கிறார்.

இது தொடர்பான வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்..


https://x.com/PTTVOnlineNews/status/1879076669589438611



Next Story