கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் விஜய்!.. இத எதிர்பார்க்கவே இல்லையே!.. வைரல் போட்டோ!...
Keerthi suresh wedding: தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்து தேசிய விருதும் வாங்கினார். தமிழில் விஜய், சூர்யா, விஷால் ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி படமான பேபி ஜான் படம் மூலம் ஹிந்திக்கும் சென்றுவிட்டார்.
விஜயின் ரசிகை:
விஜயின் தீவிர ரசிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவருடன் பைரவா மற்றும் சர்கார் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இருவரும் இணைத்து கிசுகிசுக்களும் வெளியானது. ஆனால், அவை வெறும் வதந்திகள் மட்டுமே. கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொள்ள சில நடிகர்களே விரும்பினார்கள்.
சண்டக்கோழி 2 படம் பார்த்துவிட்டு விஷாலின் பெற்றோர் கீர்த்தியின் வீட்டுக்கே போய் அவரை பெண் கேட்டதாகவும், கீர்த்தி பல வருடங்களாக கேரளாவை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கீர்த்தியின் பெற்றோர் அவர்களிடம் சொன்னதாக செய்திகள் வெளிவந்தது.
கீர்த்தி சுரேஷின் காதலர்:
சில நாட்களுக்கு முன்பு ஆண்டனி என்பவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கீர்த்தி சுரேஷே அறிவித்தார். அதோடு, கோவாவில் டிசம்பர் 12ம் தேதியான இன்று அவருக்கு திருமணம் எனவும் செய்திகள் வெளியானது. இதை கீர்த்தி சுரேஷும் மறுக்கவில்லை.
ஆண்டனி கொச்சின், துபாய், சென்னை போன்ற நகரங்களில் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் நடத்தி வருகிறார். இது இல்லாமல் அவருக்கு வேறு சில தொழில்களும் இருப்பதாக சொல்லப்பட்டது. இன்று கோவாவில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
இந்நிலையில், இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். பட்டு வேஷ்டி சட்டையோடு கீர்த்தி சுரேஷின் உறவினர்களோடு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் திருமணம் தொடர்பான மற்ற புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.