கேம் சேஞ்சருக்கு கை கொடுக்கும் விஜய்!.. அட அவரே இன்வைட் பண்ணிட்டாரே!...
Game Changer: ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள திரைப்படம்தான் கேம் சேஞ்சர். கொரோனா காலத்தில் படப்பிடிப்பு இல்லாத போது கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதையை தன்னுடையை ஸ்டைலில் திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர். இது அரசியல் கலந்த காமெடி கதை என சொல்லப்படுகிறது.
காமெடி என்றாலும் ஹீரோ ஏன் அப்படி செய்கிறார் என்பதற்கு மிகவும் அழுத்தமான பிளாஷ்பேக் படத்தில் இருக்கிறதாம். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்த பின் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்க துவங்கினார் ராம் சரண். கிட்டத்தட்ட 2 வருடங்கள் இப்படத்தின் வேலைகள் நடந்தது.
இந்தியன் 2 படத்தை இயக்கிக்கொண்டே ஒருபக்கம் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கினார் ஷங்கர். இந்த படத்தை தெலுங்கில் அதிக பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் தில் ராஜூ தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட 450 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிலும் 5 பாடல் காட்சிளுக்கு மட்டும் 90 கோடிக்கும் மேல் செலவு செய்து செம ரிச்சாக எடுத்திருக்கிறாராம் ஷங்கர். இந்த படத்தை பார்த்துவிட்டு புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் வெகுவாக பாராட்டியிருந்தார். பொங்கலை முன்னிட்டு வருகிற் 10ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.
வருகிற 7ம் தேதி இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் கலந்துகொள்ளவிருக்கிறாராம். மேலும் விஜய்க்கும் படக்குழு அழைப்பு விடுத்திருக்கிறது. விஜயின் நடித்து வெளியான வாரிசு படத்தையும் தில் ராஜே தயாரித்திருந்தார். எனவே, அவர் விஜய்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதோடு, கேம் சேஞ்சர் பட ஹீரோ ராம் சரணே விஜயை தொடர்பு கொண்டு ‘நீங்கள் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும்’ என பர்சனலாக அழைப்பு விடுத்திருக்கிறாராம். ஏற்கனவே கேம் சேஞ்சர் கதையை ஷங்கர் விஜயிடம்தான் சொன்னார். ஆனால், ஒன்றரை வருடம் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என ஷங்கர் கேட்க பேக் அடித்துவிட்டார் விஜய். எனவே, எல்லா வகையில் இந்த படத்தோடு விஜய்க்கு தொடர்பு இருப்பதால் கண்டிப்பாக அவரும் கலந்துகொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.