அரசியலுக்கு போனதும் இப்படி மாறிட்டாரே விஜய்!.. இட்ஸ் வெரி ராங் புரோ!...

விஜய் பொதுவாகவே கூச்ச சுபாவம் கொண்டவர். தனிமையை அதிகம் விரும்புவார். கூட்டத்தில் எல்லோருடன் அமர்ந்து ஜாலியாகவோ, கலகலப்பாகவோ பேசும் நபர் அவர் இல்லை. மேடையில் பேசினாலும் மிகவும் அளந்தே பேசுவார். இப்படிப்பட்ட விஜய் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.
ஷூட்டிங் நடக்கும் இடங்களிலும் கூட சக நடிகர்களிடம் மனம் விட்டு பேசமாட்டார். அவருக்கான ஷாட் முடிந்ததும் தனியாக போய் அமர்ந்துகொள்வார். ஆனால், கடந்த சில வருடங்களாக தன்னை மாற்றிக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் ஜாலியாகவே இருந்து வந்தார்.
கோட் படம் எடுக்கும்போதெல்லாம் மிகவும் ஜாலியாகவே இருந்தாராம். இதை அந்த படத்தில் நடித்த நடிகர்களே பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். விஜயை நாங்கள் இப்படி பார்த்ததே இல்லை என்று பேட்டி கொடுத்தார்கள். ஆனால், அரசியல் விஜயை மாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்கிறார்கள். ஏனெனில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் சமீபத்தில் லீக் ஆனது. இந்த திரைப்படம் தெலுங்கு சினிமா நடிகர் பாலையா நடித்து வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டு வருகிறது.
அதேநேரம், விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால் கதையில் சில மாற்றங்கள் செய்து அரசியல் தொடர்பான காட்சிகள் இதில் வைக்கப்பட்டிருக்கும் என்று சொல்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க வரும் விஜய் யாருடனும் பேசுவது இல்லையாம். அவரை சுற்றி எப்போதும் 10 பவுன்சர்கள் நின்று கொண்டே நிற்கிறார்களாம்.
இதனால் விஜயிடம் படத்தில் நடிப்பவர்கள் கூட பேச முடிவதில்லையாம். இயக்குனர் மட்டுமே போய் என்ன காட்சி, என்ன வசனம் என சொல்கிறாராம். நடித்துவிட்டு போய் கேரவானில் அமர்ந்துகொள்கிறாராம் விஜய். விஜயின் இந்த மாற்றம் படப்பிடிப்பில் நடிகர், நடிகைகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என்கிறார்கள்.