தளபதி 69 படத்தின் தலைப்பு இதுவா?!.. விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு மாஸா இருக்குமே!..

by Murugan |
தளபதி 69 படத்தின் தலைப்பு இதுவா?!.. விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு மாஸா இருக்குமே!..
X

Thalapathy69

Thalapathy 69: கோட் படத்திற்கு பின் விஜய் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே இப்போது நடிக்க சம்மதித்த படத்தில் நடித்துவிட்டு தீவிர அரசியலில் இறங்குவேன் என்றும் கூறியிருந்தார். அதன்படியே தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலிலும் இறங்கிவிட்டார்.

தவெக மாநாடு: அதோடு விக்கிரவாண்டியில் விஜய் நடத்திய முதல் மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது. விஜய்க்கு கிடைத்த வரவேற்பு ஆளும் கட்சிக்கே ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. ஒருபக்கம், மழையில் மக்கள் பாதிக்கப்பட்டபோது நேரில் போகாமல் பாதிக்கப்பட்டவர்களை தனது பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து விஜய் நிவாரண உதவி செய்தது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.


தளபதி 69: ஆனால், அதையெல்லாம் விஜய் கண்டு கொள்ளவில்லை. ஒருபக்கம், தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இது தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்படுகிறது.

பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடித்தால் அந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் வரவேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். ஆனால், தளபதி 69 படத்திற்கு அப்படி எதுவும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. அதற்கு காரணம் விஜயை அரசியல்வாதியாகவே அவரின் ரசிகர்கள் பார்க்க துவங்கிவிட்டார்கள்.


தளபதி 69 டைட்டில்: இந்நிலையில் இந்த படத்திற்கு இன்னமும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தோடு தான் அரசியலுக்கு போகவிருப்பதால் அரசியல் டச்சோடு தலைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என விஜய் ஆசைப்படுகிறாராம். ஏற்கனவே ‘தலைவா’ என்கிற தலைப்பில் அவர் நடித்துவிட்டார். அதையே ஆங்கிலத்தில் ‘பாஸ்’ என வைக்கலாம் என நினைத்தால் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்திற்காக அந்த தலைப்பை ரிஜிஸ்டர் செய்திருக்கிறார்கள்.

எனவே ‘நாளைய தீர்ப்பு’ என்கிற தலைப்பும் பரிசீலனையில் இருக்கிறதாம். விஜய் நடித்த முதல் படத்தின் தலைப்பும் அதுதான். இது மட்டும் நடந்துவிட்டால் ஒரு நடிகருக்கு முதல் படத்தின் தலைப்பே கடைசி படத்தின் தலைப்பாக அமைந்த பெருமை விஜய்க்கே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story