விஜய் கையில் போட்டிருக்கும் புது மோதிரம்!.. அட போட்டோவ அவரே ரிலீஸ் பண்ணிட்டாரே!...

Vijay: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய். இவரின் படங்கள் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கேரளா, வட மாநிலங்களிலும் விஜயின் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. அதேபோல், வெளிநாடுகளில் விஜயின் படங்களுக்கு அதிக மவுசு உண்டு.

இதுவரை எந்த இந்திய படத்திற்கும் இல்லாத அளவுக்கு விஜயின் கோட் படத்திற்கு அதிகமான முன்பதிவு வெளிநாடுகளில் இருந்தது. கோட் படத்தின் மொத்த வசூலில் வெளிநாட்டில் பெறப்பட்ட வசூல் முக்கிய பங்கு வகித்தது. கோட் படம் கடந்த 5ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படம் 400 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு பின் விஜய் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இது விஜயின் 69வது திரைப்படமாகும். விஜய் தீவிர அரசியலில் இறங்கவிருப்பதால் இது அவரின் கடைசிப்படம் என சொல்லப்படுகிறது.

தனியாக அரசியல் கட்சியும் துவங்கிவிட்டர் விஜய். விரைவில் கட்சி மாநாடும் நடக்கவிருக்கிறது. இது தொடர்பான வேலைகள் வேகமெடுத்து வருகிறது. விழுப்பும் அருகேயுள்ள விக்கரவாண்டியில் வருகிற 27ம் தேதி விஜயின் அரசியல் மாநாடு நடக்கவிருக்கிறது. இதில், லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இது இது தொடர்பாக இன்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஏதோ பேருக்கு வந்த கட்சி இல்ல.. சொல்ல மாட்டோம். செய்து காட்டுவோம்.. எங்களுக்கு அரசியல் தெரியாது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்த தெரியாது என்றெல்லாம் பேசுகிறார்கள். மாநாடு முடிந்தபின் நாங்கள் யாரென்று புரியும்’ என குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.


இந்நிலையில், கையில் கோட் என பொறிக்கப்பட்டுள்ள மோதிரத்தை அணிந்து அந்த புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார் விஜய். விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it