முரட்டு சிங்கிள் To ஃபேமிலி மேன்!.. விஷாலுக்கு நிச்சயதார்த்தம் ஓவர்!.. வைரல் போட்டோஸ்!..
Visal Wedding: தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நடித்து வருபவர் நடிகர் விஷால். பல வருடங்கள் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வளம் வந்தார். இடையில் நடிகை வரலட்சுமியோடு இவருக்கு காதல் ஏற்பட்டு அது பிரேக்கப் ஆனது. அதன்பின் நடிகை லட்சுமிமேனனை இவர் காதலித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அது என்னவானது என்கிற தகவல் வெளியே தெரியவில்லை. அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை.
சண்டக்கோழி, இரும்புத்திரை, திமிரு போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் விஷால் பிலிம் ஃபேக்டரி என்கிற தயாரிப்பு நிறுவனம் துவங்கி அவர் நடிக்கும் பல படங்களை அவரே தயாரித்தும் வந்தார்.கடந்த பல வருடங்களாகவே விஷாலுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை. அந்த நிலையில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த மார்க் ஆண்டனி படம் வெற்றி பெற்றது.
திடீரென நடிகை சாய் தன்சிகாவை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு விழாவில் அறிவித்தார் விஷால். இந்நிலையில் விஷாலின் வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் மற்றும் பெற்றோர்களின் முன்னிலையில் விஷால்-சாய் தன்சிகா இருவரின் நிச்சயதார்த்தம் இன்று முடிந்து இருக்கிறது.
விஷாலின் 48வது பிறந்தநாளனா இன்று அவரின் நிச்சயதார்த்தமும் முடிந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை விஷாலே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
