தன்ஷிகா இருக்கும்போதே மேடையில் நடிகைக்கு முத்தம்!.. அடங்கமாட்டியா விஷாலு!...

நடிகர் விஷால் தனது சொந்த வாழ்வில் சில காதல் தோல்விகளை கடந்து வந்தவர். வரலட்சுமியுடன் காதல் ஏற்பட்டு அது பிரேக்கப் ஆனது. அதன்பின் கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த நித்யா மேனனுடன் காதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், இதை விஷால் அறிவிக்கவில்லை. இதுவும் பிரேக்கப்பில் முடிந்ததாக சொல்லப்பட்டது.
அதன்பின் ஹைதராபாத்தில் ஒரு தொழிலதிபர் பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் அது நிச்சயதார்தத்தோடு நின்றுவிட்டது. அதன்பின் பல வருடங்கள் விஷால் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்து கொண்டிருந்தார். விஷாலுக்கு நிறைய பெண் தோழிகள் உண்டு.

அவர்களை பார்த்தால் அன்பை கட்டுப்படுத்த முடியாமல் பொதுவெளியிலேயே அன்பை வாரி வழங்குவார். சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்து இந்த வருட பொங்கலுக்கு வெளியான மத கஜ ராஜா படம் சூப்பர் ஹிட் அடித்தபோது, அதன் வெற்றி விழாவில் குஷ்பு மற்றும் நடிகை அஞ்சலி ஆகியோரை விஷால் கட்டியணைத்து சந்தோஷத்தை காட்டிய வீடியோக்களும் அப்போதே ட்ரோல் ஆனது.
இந்நிலையில்தான் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்கிற செய்தி நேற்று காலை முதலே இணையத்தில் பரவ துவங்கியது. தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள யோகி டா பட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், வருகிற ஆகஸ்டு 29ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அறிவித்தார் விஷால். அப்போது விஷால் - தன்ஷிகா ஜோடிக்கு சினிமா துறையை சேர்ந்த பலரும் மேடையில் ஏறி வாழ்த்து சொன்னார்கள். அதில் நடிகை ரேகா நாயரும் ஒருவர். தனக்கு வாழ்த்து சொல்ல வந்த ரேகா நாயரை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு அன்பை காட்டினார் விஷால். அதேபோல், சாய் தன்ஷிகாவுக்கும் தலையில் முத்தம் கொடுத்து அன்பை காட்டினார்.
ரேகா நாயருக்கு விஷால் முத்தம் கொடுத்ததை சரியாக புரிந்துகொண்டால் அதில் தவறு எதுவுமில்லை. ஆனாலும் சிலர் இதை விமர்சிக்க துவங்கிவிட்டனர். விஷால் இது போல பல விமர்சனங்களை தாண்டி வந்தவர்தான். விஷால் நெற்றி முத்தம் கொடுத்த ரேகா நாயர் ஒருமுறை பயில்வான் ரங்கநாதன் வாக்கிங் போகும்போது நடுரோட்டிலேயே ‘என்னைப்பற்றி எப்படி நீ பேசலாம்?’ என வெளுத்துவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.,