இப்பதான் புரியுது!.. பொறுப்பு வந்துடுச்சி!... இனிமே பாருங்க!.. சொன்னதை செய்வாரா விஷால்?!...

by Murugan |
vishal
X

Actor Vishal: செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஷால். சண்டக்கோழி, திமிறு போன்ற திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இவரின் அப்பாவே தயாரிப்பாளர் என்பதால் சொந்தமாக படங்களை தயாரித்து நடித்தார். ஒருபக்கம், மற்ற தயாரிப்பாளர்களின் படங்களிலும் நடித்து வந்தார்.

ஆனால், விஷாலில் நடவடிக்கைகள் மீது தயாரிப்பாளர்களுக்கு எப்போதும் ஒரு அதிருப்தி இருந்தது. சிம்புவை போல விஷாலும் ஷூட்டிங்கிற்கு சரியாக போகமாட்டார். படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் விஷாலுக்காக காத்துக்கொண்டிருந்தால் அவரோ வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பார்.

தொடர் தோல்வி: இதனால் கடந்த சில வருடங்களாகவே அவரால் ஹிட் படங்களை கொடுக்கமுடியவில்லை. இடையில் மார்க் ஆண்டனி மட்டுமே ஹிட் அடித்தது. சொந்தமாக படங்களை தயாரித்து அதில் நஷ்டமாகி அவருக்கு கடனும் ஏற்பட்டது. அதோடு, அவருக்கு நெருக்கமாக இருந்த 2 நடிகர்கள் அவரை ஏமாற்றிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.


மத கஜ ராஜா: இந்நிலையில்தான், மத கஜ ராஜா படத்தின் புரமோஷன் விழாவில் கை நடுக்கத்துடன், பேச முடியாமல் நின்ற விஷாலை கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். ‘விஷாலுக்கு என்னாச்சி?’, ‘ எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்?’ என பலரும் சமூகவலைத்தளங்களில் கவலை தெரிவித்தனர். அவரின் உடல்நிலைக்கு இதுதான் காரணம் என பல செய்திகளும் வெளியானது.

இந்நிலையில், மத கஜ ராஜா தொடர்பான மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷால் செய்தியாளர்கள் முன்பு பேசியபோது ‘எனக்கு ஒன்றும் இல்லை. அன்று காய்ச்சல் அதிகமாக இருந்தது. என் அப்பாவும், அம்மாவும் நிகழ்ச்சிககு போக வேண்டம் என சொன்னார்கள். ஆனால், சுந்தர்.சி-யின் முகம் நினைவுக்கு வரவே நிகழ்ச்சிக்கு வந்தேன். அதன்பின் என்னுடைய உடல் நிலை பற்றி பலரும் கவலைப்பட்டு அக்கறையோடு பேசியதை பார்த்தேன். பல ஊடகங்களும் என்னை பற்றி செய்திகள் வெளியிட்டது. உங்கள் எல்லோருக்கும் என் நன்றி.

ரசிகர்களுக்கு நன்றி: எனக்காக பிரார்த்தனை செய்த என் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்து நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை. இனிமேல் தொடர்ந்து படங்களில் நடிப்பதே என் கடமை என நினைக்கிறேன். ரசிகர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன். இப்போது எனக்கு பொறுப்பு வந்திருக்கிறது. மருத்துவர்கள் கொடுத்த மருந்தை விட என் மீது ரசிகர்கள் காட்டிய அன்பால்தான் இப்போது நின்று கொண்டிருக்கிறேன். என் உடல் நிலை பற்றி அக்கறையோடு விசாரித்த எல்லோருக்கும் நன்றி’ என நெகிழ்வாக பேசியிருக்கிறார் விஷால்.

Next Story