ஒரே மேடையில் ஒன்றிணையும் சிம்பு, தனுஷ், எஸ்கே..? எல்லாம் ஒரு நல்ல விஷயத்துக்காக தான்!..

Top Heroes: தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களாக வளம் வரும் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் மூவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் சினிமாவில் இந்த மூன்று நடிகர்களுமே படு பிஸியாக நடித்து வருகிறார்கள். நடிகர் தனுஷ் தொடர்ந்து தனது இயக்கத்திலும், நடிப்பிலும் முழு கவனத்தை செலுத்தி வருகின்றார்.
ஏகப்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு நிற்கக் கூட நேரம் இல்லாமல் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கின்றார். அவ்வளவு ஏன் தான் இயக்கிய நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவிற்கு கூட அவரால் வர முடியவில்லை. அந்த அளவுக்கு பிஸியாக இருந்து வருகின்றார் தனுஷ். மேலும் தற்போது இட்லி கடை என்கின்ற திரைப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது
நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் கமிட் செய்து வைத்திருக்கிறார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், இதை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதால் சிம்புவும் தற்போது நடிகர் பிஸியாக மாறி இருக்கின்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன்: அமரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் கெரியர் டாப்புக்கு சென்று இருக்கின்றது. தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கின்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கமிட்டான எஸ்கே 23 திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள இருக்கின்றார்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்: தமிழ் சினிமாவில் தற்போது பல திரைப்படங்களை தயாரித்துக் கொண்டு பிஸியாக இருக்கும் நிறுவனம் தவான் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஓனர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் தனுஷை வைத்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றார். சிம்புவை வைத்து சிம்பு 49 என்கின்ற திரைப்படத்தை தயாரிக்கின்றார்.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் வைத்து பராசக்தி என்கின்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகின்றார். இதற்கிடையில் நடிகர் அதர்வாவை வைத்து ஆகாஷ் பாஸ்கரன் சொந்தமாக ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இன்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அறிவிப்பு நடக்க இருக்கின்றது.
ஒரே மேடையில் 3 பிரபலங்கள்: இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் ஆகிய மூவரும் ஒரே மேடையில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. அதாவது தவான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த மூன்று நடிகர்களையும் தங்கள் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், இதனால் மூவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் தற்போது மூவரும் தங்களது படங்களில் பிசியாக நடித்து வருவதால் தான் இது நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.