62 வயதில் அம்பிகாவுக்கு வந்த ஆசை!.. இதுக்கு மேல வந்து.. என்ன செய்யப் போறாரோ.. பார்ப்போம்!..

தென்னிந்திய மூத்த முன்னணி நடிகையான அம்பிகா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இன்று அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த அம்பிகா தான் அரசியலுக்கு வருவது குறித்து பேசியுள்ளார்.
நடிகை அம்பிகா தமிழில் ’சக்களத்தி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அந்த ஏழு நாட்கள், காதல் பரிசு, காக்கிச்சட்டை, படிக்காதவன், மிஸ்டர் பாரத், விக்ரம், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சிவாஜி கணேசன், பிரபு, சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய முன்னணி நடிகையாக விளங்கினார்.

அம்பிகா என்.ஆர்.ஐ. பிரேம்குமார் மேனனை மணந்தார், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பின்பு விவாகரத்து பெற்று தற்போது தன் மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். பின்னர் அம்பிகா குணச்சித்திரம் மற்றும் அம்மா கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன், ஜீ டான்ஸ் லீக் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.
நடிகை அம்பிகா மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பிச்சை என்று இழிவுபடுத்திய நடிகை குஷ்புவை விமர்சித்தது, பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வேண்டும் என பல சமூக நலனுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில் இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் தனக்கு அரசியலில் ஈடுபட ஆர்வம் உள்ளதாகவும், எந்த கட்சி என்பதை பின்னர் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.