என் பொண்ணு ஆசைப்பட்டானு டிரை பண்ணேன்.. நெருங்கவே முடியல! விஜய் ஹீரோயினுக்கா இந்த நிலைமை?

by ROHINI |   ( Updated:2025-05-20 07:30:45  )
vijay
X

vijay

நடிகை அஞ்சு: சினிமாவில் ஒரு சில நடிகைகள் இரண்டு மூன்று படங்களில் நடித்தாலும் அவர்களை காலம் காலமாக நினைக்க வைக்கும் அளவு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு போயிருப்பார்கள். அதற்கு பல நடிகைகளை உதாரணமாக கூறலாம். நடிகை சுவலட்சுமி. விஜய் அஜித் என இருவருடனும் சில படங்களில் ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் குடிபோனவர். அவர் இப்போது என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. அவரைப் பற்றிய எந்த தகவலும் சமூக வலைதளங்களில் வெளியாகவில்லை.

அதைப்போல இன்னொரு நடிகையும் இருக்கிறார். அவர்தான் நடிகை அஞ்சு .விஜயின் பூவே உனக்காக, ஒன்ஸ்மோர் ஆகிய இரு படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது ஒரு நேர்காணலில் விஜயை பற்றி அவருடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். பூவே உனக்காக படத்தில் நான் நடித்ததே ஒரு விபத்து தான். சரி நடித்துவிட்டு வரலாம் என்று தான் அந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் அந்த படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என நான் நினைக்கவே இல்லை.

ரெண்டு சூப்பர் ஹிட் பட ஹீரோயின்: இப்பொழுது வரை அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜயின் கெரியரிலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது. அந்த படம் மூலமாக தான் தமிழ் சினிமா என்னை வாரி அணைத்துக் கொண்டது. அடுத்ததாக ஒன்ஸ்மோர் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்தேன். அந்தப் படத்தின் போது தான் அவருடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பூவே உனக்காக படத்தில் கூட எனக்கும் விஜய்க்கும் அவ்வளவு ஆக காம்பினேஷன் இல்லை. ஒன்ஸ்மோர் படத்தில் தான் நாங்கள் நண்பர்களாக மாறினோம். அதன் பிறகு நான் விஜயை பார்க்கவே இல்லை. அவருடைய அம்மாவுக்கு அவ்வப்பொழுது நான் whatsappபில் குறுஞ்செய்தி அனுப்பவேன். பத்து வருடத்திற்கு முன்பே விஜயின் அம்மா என்னிடம் விஜய் முன்பு மாதிரி இல்ல. ரொம்ப மாறிட்டான் என கூறினார். அந்த அளவுக்கு விஜயின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அதை குறிப்பிட்டது தான் அவருடைய அம்மா அவ்வாறு கூறினார்.


மகளின் ஆசை: என்னுடைய பொண்ணு விஜயை எப்படியாவது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டாள். நானும் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்கிறேன். விஜய்க்கு நெருக்கமானவர் ஒருவரின் நம்பரை கொடுத்து குறுஞ்செய்தி அனுப்பச் சொன்னார்கள். நானும் அனுப்பினேன். ஆனால் அது விஜய்க்கு போய் சென்றிருக்காது என நினைக்கிறேன். ஒருவேளை சென்றிருந்தால் கண்டிப்பாக விஜய் என்னை அழைத்து இருப்பார். ஏனெனில் விஜய் அந்த மாதிரி கேரக்டர் தான் என அஞ்சு கூறினார் .சமீபத்தில் தான் ரம்பா அவர்கள் குடும்பத்துடன் விஜயை சந்தித்தார். அதைப்போல இந்த பேட்டியின் மூலம் கூடிய சீக்கிரம் அஞ்சு அவருடைய மகள் இருவரும் விஜயின் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என இந்த பேட்டியை எடுத்த தொகுப்பாளர் கூறினார்.

Next Story