ஒரு பக்கம் குரங்குனு சொன்ன நயன்.. இன்னொரு பக்கம் தரமான ரோஸ்ட்.. பிஸ்மியை வறுத்தெடுத்த நடிகை

90கள் காலகட்டத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் மிகவும் பிஸியான நடிகையாக இருந்தவர் சார்மிளா. பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர். குறிப்பாக கேரளாவில் லேடி சூப்பர் ஸ்டார் போலவே இவர் அறியப்பட்டவர். இந்த நிலையில் வலை பேச்சு புகழ் பிஸ்மியை பற்றி சில விஷயங்களை சார்மிளா கூறியிருக்கிறார்.
பிஸ்மியை பொறுத்த வரைக்கும் நடிகர் நடிகைகள் இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை பற்றியும் தன்னுடைய வலைப்பேச்சு சேனல் மூலமாக கூறி வருகிறார் பிஸ்மி .சமீபகாலமாக நயன்தாராவை பற்றி பல கருத்துக்களை கூறி வந்தார். இதைப்பற்றி சார்மிளா கூறும் பொழுது சின்ன குழந்தைகளிடம் கூட கேட்டால் சொல்வார்கள் நயன்தாரா ஒரு சூப்பர் ஸ்டார் என்று.
ஆனால் இவருக்கு என்ன வலிக்குது. சூப்பர் ஸ்டார் என்றால் அடிக்கணும் உதைக்கணும் இதுதான் அர்த்தமா. விஜயசாந்தி தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறார். ஏனெனில் அவர் ஆக்சன் காட்சிகளில் நடித்து பெரிய பெரிய ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்திருந்தார். அதனால் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம் என கூறினார் பிஸ்மி. அப்படி என்றால் அந்த கால கே ஆர் விஜயா ,பத்மினி, சாவித்திரி இவர்களை எல்லாம் என்ன இவர் சொல்வார்.
சூப்பர் ஸ்டார் என்றால் ஸ்டண்ட் காட்சிகள் மட்டும் அல்ல. நடிப்பிலும் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும். அதை அழகாக வெளிப்படுத்தி வருகிறார் நயன்தாரா. அதைப்போல இவருடைய திருமணத்தைப் பற்றியும் பல வகைகளில் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறார் பிஸ்மி. விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்தது இவருக்கு ஏன் பிடிக்கவில்லை என தெரியவில்லை.
ஒருவேளை நயன்தாராவை ப்ரொபோஸ் செய்திருப்பார். அதற்கு நயன்தாரா சம்மதித்திருக்க மாட்டார். அதனால் தான் விக்னேஷ் சிவனைப் பார்த்தால் இவருக்கு எரியுதோ என்னமோ. ஒரு பத்திரிக்கையாளராக இருந்து கொண்டு இந்த மாதிரி அவர் பேசலாமா. அசிங்கமா இல்லை. நயன்தாரா மட்டுமல்ல குஷ்புவையையும் பல வகைகளில் பிஸ்மி பேசி இருக்கிறார் .
நயன்தாரா மற்றும் குஷ்பூ ஆகிய இருவருமே தமிழ்நாடு கிடையாது. ஆனால் இருவரும் இங்குள்ள இயக்குனர்களை திருமணம் செய்து கொண்டு இப்போது வரை திருமண வாழ்க்கையில் செல்வ செழிப்போடு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது ஒரு தமிழ்நாட்டு பத்திரிகையாளராக இருந்து இவர்களை பாராட்ட வேண்டுமே தவிர இவர்களைப் பற்றி தவறாக பேசக்கூடாது .
ஏன் இந்த மாதிரி அவர் பேசுகிறார் என தெரியவில்லை .தன்னை ஒரு செலிபிரிட்டிக்கு இணையாக அவர் காட்ட வேண்டும் என நினைக்கிறாரா என்றும் தெரியவில்லை. ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து ஹீரோவாக ஆக வேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் அது முடியவில்லை. அந்த ஆதங்கத்தில் கூட நடிகர் நடிகைகளை பற்றி இவ்வாறெல்லாம் பேசுகிறாரா என தெரியவில்லை என சார்மிளா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்