சூர்யவம்சம் இட்லி உப்புமா ஸ்பெஷல்! இந்தளவு பாப்புலர் ஆனதற்கு இவர்தான் காரணமா?

by ROHINI |   ( Updated:2025-05-08 14:35:36  )
devayani
X

devayani

Actress Devayani:சரத்குமார் கெரியரிலேயே காலங்காலமாக நின்னு பேசும் படமாக அமைந்தது சூர்யவம்சம். விக்ரமன் இயக்கத்தில் ஒரு குடும்ப படமாக சூர்யவம்சம் படம் அமைந்தது. சரத்குமார் இரட்டை வேடங்களில் அப்பா மகன் கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகாவும் மகன் சரத்குமாருக்கு ஜோடியாக தேவயாணியும் நடித்திருப்பார்கள்.

ஆரம்பத்தில் மகன் சரத்குமார் அப்பா சரத்குமார் சொன்னதை கேட்காமலேயே வளர்ந்ததால் கடைசி வரை ஒரு உதவாக்கரை மகனாகவே சரத்குமாரை பார்ப்பார் அப்பா சரத்குமார். அப்போது அந்த உதவாக்கரை சரத்குமாரை சந்தித்து காதலித்து திருமணம் செய்து பின் வாழ்க்கையில் ஒரு நல்ல உயரத்தை அடைய தேவயாணியின் பங்கு என்பது மிக முக்கியமானதாக இருந்தது.

இப்படி திருமணத்திற்கு பிறகு மகன் சரத்குமாரும் தேவயாணியும் மிகவும் கஷ்டப்பட எப்படியோ சின்ன சின்ன வேலைகளை எல்லாம் செய்து குடும்பத்தை காப்பாற்றுவார் சரத்குமார். இன்னொரு பக்கம் தேவயாணி கலெக்டராக வேண்டும் என்ற ஆசையில் படித்துக் கொண்டிருப்பார். அப்படி இருக்கும் போது தன் மகளை பார்க்க தேவயாணியின் அப்பா ஜெய்கணேஷ் வீட்டிற்கு வர அப்போது அவருக்கு சாப்பிட கொடுக்க ஒன்றுமே இருக்காது.

அப்போது பழைய இட்லிதான் இருக்கும். அதை உதிர்த்து இட்லி உப்புமாவாக தன் அப்பாவுக்கு செய்து கொடுப்பார் தேவயாணி. அதுவரை யாருக்குமே இட்லி உப்புமா என்றால் என்ன என்பதே தெரியாது. இந்த படம் வெளியான பிறகுதான் பெரும்பாலானோர் வீட்டில் இட்லி உப்புமாவின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது. அந்தளவுக்கு இட்லி உப்புமா பாப்புலர் ஆனது.

devayani

எப்படி இந்த காட்சியை எடுத்தார்கள் என்று தேவயாணியிடம் கேட்ட போது விக்ரமன் வீட்டில் அடிக்கடி இட்லி உப்புமா செய்வார்களாம். அவர் அடிக்கடி அதை சாப்பிட்டிருக்கிறாராம். நன்றாக இருக்கும் என்று சொல்வாராம் விக்ரமன். அதனால்தான் இந்த காட்சியை படத்தில் வைத்தார் என தேவயாணி கூறினார்.

Next Story