சீஃப் கெஸ்ட்டா போயே கல்லா கட்டும் ஜீவா பட நடிகை!.. கூட்டம் இப்படி கூடுதே!..

Honey Rose: சினிமா நடிகைகளுக்கு மார்கெட் போய்விட்டால் தயாரிப்பாளர் ஆவார்கள். அல்லது குணச்சித்திர நடிகையாக மாறி அண்ணி, அக்கா, அம்மா வேடங்களில் நடிப்பார்கள். சினிமாவில் வாய்ப்பே இல்லை என்றாலும் சீரியல் பக்கம் போய்விடலாம். குஷ்பு, தேவயாணி, அம்பிகா உள்ளிட்ட பல நடிகைகளும் அப்படித்தான் மாறினார்கள். இதில் ராதிகா போல சிலர் மட்டுமே சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் பயணம் செய்து வருகிறார்கள்.
மார்கெட் போன பாலிவுட் நடிகைகள் எல்லாம் சினிமா தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு காசு சம்பாதிப்பது என ரூட்டை மாற்றிக்கொண்டார்கள். ஒருபக்கம், கடை திறப்பு விழாக்களுக்கு சென்றும் பல நடிகைகள் கல்லா கட்டுகிறார்கள்.

இதில் முக்கியமானவர் ஹனி ரோஸ். கேரளாவை சேர்ந்த இவர் மலையாள மொழியில் பல படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ஜீவா நடித்த சிங்கம் புலி படத்திலும் நடித்திருந்தார். கடந்த 20 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். சிங்கம் புலி படத்திற்கு பின் காந்தர்வன், ரிங் மாஸ்டர், பட்டாம்பூச்சி ஆகிய படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களாகவே தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். பாலையாவுக்கு அம்மாவாக நடித்த பெருமையும் இவருக்கு உண்டு.
ஒருபக்கம், கேரளாவில் துணிக்கடை மற்றும் நகைக்கடை திறப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக சென்றும் கல்லா கட்டுகிறார். கவர்ச்சியான உடையில் ஜிகுஜிகுவென செல்லும் ஹனி ரோஸை பார்ப்பதற்கென்றே அங்கு ஒரு கூட்டம் கூடுகிறது. குத்துவிளக்கை பற்ற வைத்துவிட்டு பவ்யமாக நிற்பதற்கு பல லட்சம் இவர் பணம் வாங்குகிறார்.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது. அப்படி ஒரு விழாவில் ஒரு தொழிலதிபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். மொத்தத்தில் சினிமா இல்லை என்றாலும் கடை திறப்பு விழாக்களுக்கு சென்றே ஹனி ரோஸ் நன்றாகவே கல்லா கட்டி வருகிறார். இவரைப்பார்த்து மார்க்கெட் போன மலையாள நடிகைகள் பெருமூச்சி விடுகிறார்களாம்.