1. Home
  2. Cinema News

பாரில் துன்புறுத்தலுக்கு ஆளானேன்… கண்ணீர் வடித்த லட்சுமி மேனன்

பாரில் துன்புறுத்தலுக்கு ஆளானேன்… கண்ணீர் வடித்த லட்சுமி மேனன்

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் தமிழில் முதலில் அறிமுகமான ”கும்கி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றார். அதன் பிறகு இவர் நடித்த சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை கடைசியாக இவரின் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 போன்ற படங்கள் இவருக்கு தனி அடையாளத்தை பெற்று கொடுத்தது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் பிஸியாக நடித்து வந்த லட்சுமி மேனன் அந்த சமயத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று தன்னுடைய மேற்படிப்பதற்காக சினிமாவில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் நடிகை லட்சுமி மேனன் தரப்புக்கும், ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலை தொடர்ந்து ஐடி ஊழியரை காரில் கடத்தி சென்று லட்சுமி மேனன் தரப்பு தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த ஐடி ஊழியர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் லட்சுமி மேனுடன் மதுபான விடுதிக்கு வந்திருந்த மூன்று பேரையும் போலீஸ் கைது செய்தது , விசாரணைக்கு அழைத்த நிலையில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகிவிட்டதாக எர்ணாகுளம் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

விசாரணை போது, மதுபான விடுதியில் மது அருந்தும் போதும் ஐடி ஊழியருக்கும் லஷ்மி மேனன் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்துள்ளது. இதில் கடுப்பான லக்ஷ்மி மேனன் கேங் ஐடி ஊழியரை கடத்தி தாக்குதல் நடத்தி பழிவாங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் நடுரோட்டில் குடிமி பிடி போடும் சண்டை காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில் லட்சுமி மேனன் நண்பர் மிதுன் மோகன் பல்வேறு கடத்தல் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூலிப்படையாக செயல்படும் மிதுன் மோகனுடன் லட்சுமிமேனனுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது என கேரளா போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.‌

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் பாரில் தனக்கு நடந்த அவலங்களை வெளியே சொல்லியுள்ளார். ”அந்த ஐடி ஊழியர் பாரில் என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்” என்றும் ”நான் பாரை விட்டு வெளியே வந்த பின்பு அந்த நபர் என் காரை பின் தொடர்ந்து பீர்பாட்டிலால் தாக்கினார்” என்றும் ”அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் ஜோடிக்கப்பட்டது அது முற்றிலும் பொய் நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார். போலீஸிடம் மாட்டிக் கொண்ட நடிகர் லட்சுமிமேனன் கண்டபடி வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.