Ajith: என்னுடைய கிரஷ் அஜித்! ஆனா சிஸ்டருனு சொல்லி அப்செட் ஆக்கிட்டாரு.. யாருப்பா அந்த நடிகை?
Ajith: தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் அஜித் கல்லூரி படிப்பை தொடர விரும்பாமல் அவருடைய விருப்பமான மோட்டார் சைக்கிள் ரேசிங் தொழிலை தேர்ந்தெடுத்தார். ரேசிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவர். ஆரம்பத்தில் மெக்கானிக்கல் கம்பெனி ஒன்றில்தான் வேலை பார்த்தார் அஜித். அதன் பிறகுதான் பைக் ரேசிங்கில் ஈடுபட்டார்.
சினிமாவில் அறிமுகம்:
சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலிங்கிலும் ஈடுபட்டார். ஆரம்பத்தில் சிறு வேடங்களில் நடித்த அஜித் முதன் முதலில் 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தில்தான் ஹீரோவாக அறிமுகமானார், இவரை திரையுலகில் மிகவும் பிரபலப்படுத்திய திரைப்படம் ஆசை. 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை படத்தில் இவருடைய சாதுவான கேரக்டர், ஹேண்ட்ஸம்மான லுக் என மக்களை வெகுவாக ஈர்த்தது.
அதனை தொடர்ந்து காதல் கோட்டை திரைப்படம்தான் இவரை ஒரு காதல் மன்னனாக ரசிகர்களிடம் ரசிக்க வைத்தது. பெரும்பாலும் காதல் போன்ற படங்களிலேயே நடித்து வந்ததனால் இவருக்கு என பெண் ரசிகைகள் உருவானார்கள். அது இப்போது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தன் வாழ்க்கையில் பெரும்பாலும் கஷ்டங்களையே பார்த்து வந்தவர் அஜித்.
அஜித் என்றால் எதற்கெல்லாம் பேர் போனவர்?
- விடாமுயற்சி
- தன்னம்பிக்கை
- கடின உழைப்பு
என அஜித்தை கொண்டாடி வருகிறார்க்ள் அஜித் ரசிகர்கள்.
ஆக்ஷன் ஹீரோவாக மாறிய தருணம்:
கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று ஒரு முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார் அஜித். காதல் ரொமாண்டிக் ஹீரோவாக வந்த அஜித்தை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் அமர்க்களம். அமர்க்களம் தீனா போன்ற படங்கள் அவரின் ஹீரோயிசத்தை வெளிப்படுத்திய படங்களாக அமைந்தன.
இன்று அவர் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி படம் பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் அஜித் நடிக்க இருக்கிறார். இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிறகுதான் அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்செட்டாக்கிய அஜித்:
இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் அஜித்தை பற்றி கூறிய ஒரு தகவல் வைரலாகி வருகின்றது. அவர் வேறு யாருமில்லை. நடிகை மகேஸ்வரி. அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார் மகேஸ்வரி.உல்லாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த காலகட்டத்தில் அஜித்தான் மகேஸ்வரியின் தீவிர கிரஷ்ஷாம். கிரஷையும் தாண்டி அஜித் நல்ல மனிதர். பக்கா ஜெண்டில்மேன்.
அவரை மிகவும் பிடிக்கும். ஒரு சமயம் படப்பிடிப்பின் கடைசி நாள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஒன்றாக ஒரு படத்தில் வேலை பார்த்தோம். கடைசி நாள் என்பதால் நான் மிகவும் சோகமாக இருந்தேன். இனிமேல் எப்பொழுது அஜித்தை பார்க்க போகிறோம். பேசப்போகிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அஜித் என்னிடம் வந்தார். ‘ நீ என்னுடைய சகோதரி மாதிரி. உன் வாழ்க்கையில் என்ன கஷ்டம், என்ன வேண்டுமானாலும் நான் இருக்கிறேன்.’ என சொன்னாராம். இது மகேஸ்வரிக்கு கொஞ்சம் ஷாக்காக இருந்தாலும் நிலைமையை சமாளித்துவிட்டாராம்.
