கூட்டத்தில் சதி செய்ய நிறைய பேர் இருக்காங்க! விஜய்க்காக உருகும் பாசமான தங்கச்சி

கரூர் துயர சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜய் தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் விஜய்க்கும் இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் யாரெல்லாம் சாடி பேசியிருந்தாரோ அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
விஜய் மீது ஒட்டுமொத்த காட்டத்தையும் காட்டினர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி வந்தார்கள். அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை தற்போது சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்னொரு பக்கம் விஜய் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அவர் சொன்னதை போலவே 20 லட்சம் நிவாரணத்தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் தற்போது செலுத்தப்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த குடும்பத்திற்கு கடிதம் ஒன்றையும் விஜய் அனுப்பியிருக்கிறார். அதில் கூடிய சீக்கிரம் உங்களை எல்லாம் வந்து சந்திக்கிறேன் என்றும் அது சம்பந்தமாக சட்ட ரீதியாக அணுகியிருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். உங்களை சந்திக்க அனுமதி கிடைத்ததும் கூடிய சீக்கிரம் வந்து பார்க்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக பிரபல நடிகை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த மல்லிகாதான்.இன்ஸ்டாகிராம் ஒப்பன் பண்ணாலே விஜய்சாரின் ரீல்ஸ்தான் வந்து கொண்டிருப்பதாக மல்லிகா கூறினார். அதுவும் சமீபத்தில்தான் இவரும் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறாராம்.
விஜய் பற்றி மேலும் அவர் கூறும் போது ‘எனக்கும் விஜய் சாரை பற்றி ரெண்டு மூணு வார்த்தைகள் பேசவேண்டும். திருப்பாச்சி படத்தில் நடிக்கும் போது ரொம்ப பாவமான கேரக்டர் எனக்கு. அந்த நேரத்தில் ஷாட் முடிந்ததும் விஜய் சார் போய் உட்கார்ந்துவிடுவார். யாரிடமும் பேசமாட்டார். நாம் போய் பேசினால் பேசுவார். ஆனால் அதிகமாக யாரிடமும் பேசமாட்டார்.’
‘அப்படி இருந்த விஜய் எப்படி அரசியலுக்கு செட்டாவார் என்று ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அவர் பேசுவதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. ரொம்பவே மாற்றம் தெரிகிறது. மிகவும் ஸ்ட்ராங்கான நபர் விஜய் சார். மக்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். விஜய் சார் கண்டிப்பாக விஜய் முன்னாடி நடிக்கமாட்டார்.கேமிரா முன் மட்டும்தான் நடிப்பார். மற்றபடி மக்கள் முன் நடிக்கவே மாட்டார்.’
‘அதனால் அந்த மாதிரி ஒரு மனுஷன் இப்போ தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைச்சிருக்காரு. நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க. இந்த கலிகாலத்தில் நல்லது செய்யணும்னு நினைச்சால் கூட கெட்ட விஷயங்கள் நமக்குள் வந்துவிடும். ஆனால் கடைசியில் அவங்கதான் ஜெயிப்பாங்க. அதே போல் விஜய் சார் கண்டிப்பாக ஜெயிப்பாங்க. இன்னொரு விஷயம் விஜய் சாருக்கு நான் சொல்லணும்.’
‘விஜய் சார் உங்களை நீங்க நல்லா பாத்துக்கோங்க. கூட்டத்தில் சதி செய்ய நிறைய பேர் வருவாங்க. அதனால் உங்கள பாத்துக்கோங்க. நீங்க நல்லா இருந்தால்தான் உங்கள நம்பி வர்றவங்கள நீங்க நல்லா பாத்துக்க முடியும்’ என மல்லிகா கூறியிருக்கிறார்.