சம்பள விஷயத்தில் திடீரென காம்ப்ரமைஸ் ஆன நயன்! பொசுக்குனு இப்படி குறைச்சிட்டாரே

தென்னிந்திய சினிமாவில் ஒரு டாப் நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஐயா திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான நயன்தாரா இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து அஜித் விஜய் சூர்யா என கோலிவுட்டில் இருக்கும் டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இன்று ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி அமையும் திரைப்படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

அதுவும் திருமணத்திற்கு பிறகு அவர் கதைகளை மிகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது மண்ணாங்கட்டி , டெஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வரும் நயன் அடுத்ததாக கவின் உடன் ஒரு புதிய படத்தில் இணைய இருப்பதாக செய்தி வெளியானது.

ஆனால் அந்த படத்திற்காக 15 கோடி சம்பளம் கேட்டதாகவும் அவ்வளவு சம்பளத்தை கொடுக்க முடியாது என படத்தையே தயாரிப்பு நிறுவனம் டிராப் செய்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இப்போது வந்த தகவலின் படி நயன்தாரா தான் கேட்ட சம்பளத்தில் இருந்து ஐந்து கோடியை குறைத்துக் கொண்டு பத்து கோடி சம்பளம் கொடுத்தால் போதும் என்ற நிலைமைக்கு வந்திருக்கிறாராம் .

இந்த சம்பளத்தை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன்வர கூடிய சீக்கிரம் இந்த படத்தின் படப்பிடித்து துவங்க இருக்கிறது. என்னதான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவருடைய மவுசு என்பது குறுகிய காலம் மட்டுமே. அதுவும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் இன்னும் அதே கெத்தில் வலம் வர முடியும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார் நயன்.

ஆனால் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் அடுத்தடுத்த ஹீரோயின்களை தேடியே அவர்கள் பயணித்து வருகின்றனர். அதனால் கிடைத்த வாய்ப்பை ஏன் தவறவிட வேண்டும் என நினைத்துக் கூட நயன் சம்பள விஷயத்தில் காம்ப்ரமைஸ் ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது.

Related Articles

Next Story