தன்னோட படத்துக்கே வாய திறக்காத நயன்!.. ‘பறந்து போ’ படத்துக்கு என்ன சொல்லி இருக்கார் பாருங்க!..

by MURUGAN |   ( Updated:2025-07-08 02:21:17  )
nayan
X

Paranthu Po: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இவர் இருக்கிறார். லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டமும் அவருக்கு கொடுக்கப்பட்டது. கதாநாயகனோடு டூயட் பாடும்படி பல படங்களில் நடித்தாலும் மாயா, நெற்றிக்கண், நானும் ரவுடிதான், அறம், அன்னப்பூரணி போன்ற பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார்.

இவரைப்பார்த்து ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் போன்றவர்களும் அதேபோல படங்களில் நடித்தனர். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாவாகிவிட்டார். இப்போது நடிப்பதை குறைத்துக்கொண்டு குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்து வருகிறார்.

சமீபத்தில் கூட குழந்தைகளுடன் அவர் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில்தான் குழந்தையின் மனநிலையை அடிப்படையாக வைத்து இயக்குனர் ராம் இயக்கிய பறந்து போ படத்தை நயன்தாரா பாராட்டியிருக்கிறார்.


ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸி ஆண்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஒரு சிறுவனுக்கும், அவனின் அப்பாவுக்கும் இடையே இருக்கும் அன்பான உலகத்தை இப்படம் சித்தரிக்கிறது. மகனின் ஆசையை நிறைவேற்ற ஒரு அப்பா என்னவெல்லாம் செய்கிறார், அவர்கள் எங்கெல்லாம் போகிறார்கள் என்பதை உணர்வுபூர்வாக, ஒரு ஃபீல் குட் படமாக கொடுத்திருக்கிறார் ராம்.

இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில்தான் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இப்படத்தை பாராட்டி பதிவு போட்டியிருக்கிறார். அதில் ‘வாழ்க்கையை உண்மையிலேயே நீங்கள் ரசிக்க விரும்பினால் உங்கள் குழந்தைகளை மலைகளுக்கு அழைத்து சென்று அவர்களுடன் மலை ஏறுங்கள்.. அல்லது ஒரு குளத்தின் அருகே அவர்களுடன் விளையாடுங்கள்.. அல்லது ராம் சாரின் பறந்து போ படத்திற்கு அவர்களை அழைத்து சென்று நாம் அனைவரும் உண்மையில் எதை இழக்கிறோம் என்பதை பாருங்கள்.. நான் பார்த்த மிகவும் இனிமையான படங்களில் ஒன்று’ என சிலாகித்து சொல்லியிருக்கிறார்.

பொதுவாக தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட நயன் கலந்துகொள்ளமாட்டார். தனது சமூகவலைத்தள பக்கங்களில் கூட தான் நடிக்கும் படங்களை புரமோஷன் செய்யமாட்டார். அது தேவையில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடும் என நினைப்பார். அப்படிப்பட்ட நயன் ராமின் ‘பறந்து போ’ படத்தை இப்படி சிலாகித்து எழுதியிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

Next Story