அந்த மாதிரி ஆள் நான் கிடையாது!.. பி.ஆர் ஸ்டண்ட் எனக்கு எதுக்கு?.. கொதித்து பேசிய நயன்!..
நடிகை நயன்தாரா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை நயன்தாரா தற்போது வரை ஹீரோயினியாக பல படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார் நடிகை நயன்தாரா.
விக்னேஷ் சிவனுடன் காதல்:
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் பல ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் நடிகை நயன்தாரா படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.
தனுஷுடன் பிரச்சனை:
நடிகை நயன்தாரா தனது திருமண வீடியோவை டாக்குமென்டரியாக எடுத்து அதனை தனது பிறந்த நாளன்று வெளியிட்டு இருந்தார். இந்த டாக்குமெண்டரியில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த சில காட்சிகளை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக கோரி 3 பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆவணப்படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு இந்த அறிக்கையை நடிகை நயன்தாரா வெளியிட்டதால் விளம்பரத்திற்காகவும் பி.ஆர் ஸ்டண்ட்காகவும் செய்ததாக பேசி வந்தார்கள்.
நயன்தாரா விளக்கம்:
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு நடிகை நயன்தாரா சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'என்னுடைய விளம்பரத்துக்காக மற்றொருவரின் இமேஜை கெடுக்கின்ற ஆள் நான் கிடையாது. எங்களையும் பெரும்பாலான மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் தனுஷ் ரசிகர்களாக நலம் விரும்புகிறார்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
அது நல்லது தான். அதற்காக நாங்கள் பி.ஆர் ஸ்டண்ட் செய்கிறோம் என்று எப்படி சொல்லலாம்? எங்கள் மனதில் அப்படி ஒரு விஷயமே இல்லை. ஒரு படத்தை ஒரு திரைப்படமாக பார்க்க வேண்டியதில்லை. இது ஒரு ஆவணப்படம். உங்களுக்கு பிடித்த ஒரு நபரை குறித்து அதிகமாக நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் இந்த ஆவண படத்தை பார்க்கலாம். இதற்கு ஹிட் ப்ளாப் என்றெல்லாம் எதுவும் கிடையாது.
இந்த பிரச்சனையை தனிப்பட்ட முறையில் அவரை தொடர்பு கொண்டு பேச விரும்பினோம். உண்மையாகவே என்ன பிரச்சனை என நேரடியாக பதில் பெற விரும்பினேன். என் கணவர் விக்னேஷ் சிவனும் தனுஷின் மேலாளருக்கு தொடர்பு கொண்டு பிரச்சனையை சரி செய்ய முயன்ற போதும் தனுஷை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ட்ரைலர் ரிலீஸ் ஆனபோது எங்கள் மொபைலில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் இடம் பெற்றிருந்தன. ஆனால் மக்கள் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த காட்சி தனுஷின் உரிமை என்று குரல் கொடுத்து வந்தார்கள்' என்று காட்டமாக பேசி இருக்கின்றார்.