
Cinema News
TVK Vijay: கரூர் கோர சம்பவம்! உடனே விஜயை கைது பண்ணுங்க!.. பொங்கிய ஓவியா
TVK Vijay:
நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். அந்த வகையில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து ஆரம்பித்த விஜய் தொடர்ந்து கடலூர், நாமக்கல், கரூர் என சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் போதெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அந்த வகையில் நேற்று கரூரிலும் யாரும் எதிர்பார்க்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் கூட்டத்தில் மயங்கி விழ வேனில் இருந்தவாறே விஜய் வாட்டர் பாட்டிலை தூக்கி தண்ணீர் குடிங்க என கூறினார். அந்தளவுக்கு கூட்டம் இருந்தது. அதுவும் காலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட விஜய் காலையிலேயே மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதனால் காலையில் இருந்தே விஜயை பார்ப்பதற்காக மக்கள் கூடிவிட்டனர். ஆனால் விஜய் காலதாமதமாகத்தான் வந்திருக்கிறார். இதுவே மக்களுக்கு ஒரு அசதியை ஏற்படுத்திவிட்டது. பெண்கள் முதல் கைக்குழந்தைகள் வரை அந்த கூட்ட நெரிசலில் அல்லோலப்பட்டு வந்தனர். ஆரம்பத்திலேயே விஜய் தனது மாநாடு கூட்டம் கூடும் போதே குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என யாரும் வர வேண்டாம் என்றுதான் சொல்லிவந்தார்.
அது மா நாட்டுக்கு மட்டும் இல்லை. அவரின் தேர்தல் பிரச்சாரத்துக்கும் பொருந்தும். ஆனால் அதையும் மீறி நேற்று கைக்குழந்தையை தூங்கிக் கொண்டு விஜயை பார்க்க அந்த கூட்டத்தில் காத்திருந்தார்கள். இதுவே ஒரு வகையில் மக்கள் செய்த முட்டாள்தனம்தான். இதற்கு முன் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டத்தை பார்த்திருக்கமாட்டார்களா? அப்படி தெரிந்தும் கைக்குழந்தைகளையும், சிறுவர் சிறுமியர்களையும் அழைத்துக் கொண்டு வருகிறார்கள் என்றால் இந்த மக்களை என்ன சொல்வது?
கூட்ட நெரிசலில் பலரும் மயங்கி விழுவதும், அதனால் பல பேருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டதும் என மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதில் 36 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இன்று காலை நிலவரப்படி இந்த எண்ணிக்கை 39 ஆக மாறியது. உடனே நேற்று விஜய் விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்காக பத்திரிக்கையாளர்கள் காத்திருக்க அவர்களை கண்டுகொள்ளாமல் விஜய் சென்றார்.
அதே சமயம் இந்த தகவல் அறிந்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவே கரூர் வந்தடைந்தார். அதுமட்டுமில்லாமல் மற்ற அமைச்சர்களும் கரூர் சென்று விட்டனர். நேற்று துபாய் சென்ற உதய நிதியும் நேற்று இரவே துபாயிலிருந்து கிளம்பிவிட்டார். இப்படி அரசியல் களத்தில் ஒரே பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இதில் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ரஜினி, கமல், விஷால், ஜிவி என திரைபிரபலங்களும் அவர்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று நடிகை ஓவியா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கரூர் சம்பவம் மிகுந்த வேதனையை அளித்தது. 39 பேர் உயிரிழந்த நிலையில் விஜயை கைது செய்ய வேண்டும் என தனது ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார்.