கையில் சரக்கு பாட்டிலுடன் பைக்கில ட்ரிபிள்ஸ்... வைரலாகும் ஓவியாவின் புது வீடியோ...!

by ramya |
கையில் சரக்கு பாட்டிலுடன் பைக்கில ட்ரிபிள்ஸ்... வைரலாகும் ஓவியாவின் புது வீடியோ...!
X

oviya

தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஓவியா. சினிமாவில் கிடைத்த பேரும் புகழையும் தாண்டி பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் தானே வெளியேறினாலும் ரசிகர்கள் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கொடுத்திருந்தார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஓவியாவிற்கு என்று ஆர்மி ஒன்றை தொடங்கினார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் அவரை எதிர்பார்க்கலாம் என்று எண்ணிய நிலையில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே அவரைப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு பெரியளவு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவில் இருக்கும் டாட்டுவை பார்த்து அது ஓவியாதான் என்று பலரும் கூறி இருந்தார்கள். வீடியோவில் இருப்பது நான் இல்லை மார்ப்பிங் செய்த வீடியோ என்று ஓவியா அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். மேலும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஓவியா இது தொடர்பாக புகார் கொடுத்தார்.

ஓவியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ இப்படி செய்ததாக ஓவியாவின் மேலாளர் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவை பார்த்தவர்கள் அது ஓவியா தான் என்று கன்பார்ம் செய்து விட்டார்கள். ஓவியாவுடன் இருப்பது தாரிக் என்று கூறினார். இப்படி ஒரு பக்கம் சர்ச்சைக்கு பிரபலமாகி வந்த ஓவியா அது குறித்து எல்லாம் கவலைப்படாமல் ஊர் சுற்றி வருகின்றார்.

தற்போது பாங்காக் சென்றிருக்கும் அவர் அங்கு நைட் பாட்டில் ஆபாசமாக நடனமாடியிருந்தார். இதைத்தொடர்ந்து ஓவியா சரக்கு அடித்தபடி தனது தோழியுடன் பைக்கில் செல்லும் வீடியோவையும் அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களின் வீடியோ குறித்த சர்ச்சையே இன்னும் ஓயல இத பத்தி எல்லாம் கவலைப்படாம உங்களுக்கு பிடிச்சதை மட்டும் செய்து வருகிறீர்கள் என்று கூறி வருகிறார்கள்.

Next Story