டீ ஆத்தும் ரஜினி பட அம்மா நடிகை... இவங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா...?

by sankaran |   ( Updated:2024-10-13 17:01:05  )
Rajnikanth
X

ரஜினியும், பிரபுவும் சேர்ந்து நடித்த படம் குருசிஷ்யன். ரஜினியும், பிரபுவும் இணைந்து நடித்த மாபெரும் வெற்றிப்படம் இது. அதன்பிறகு சந்திரமுகி படத்தைச் சொல்லலாம்.

பாண்டியனும் இந்தப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து இருப்பார். ரஜினிக்கு ஜோடியாக கவுதமியும், பிரபுவுக்கு ஜோடியாக சீதாவும் நடித்திருப்பார்கள்.

சோ, மனோரமா, வினுசக்கரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் அருமை.

ஜிங்கிடி ஜிங்கிடி, கண்டுபிடிச்சேன், நாற்காலிக்கு சண்டை, உத்தம புத்திரி நானு, வா வா வஞ்சி ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.

அந்தக் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே நாற்காலி சண்டை தான் அரசியல் என்பதை ரஜினி ஒரு பாட்டின் மூலமாக தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினியின் அப்பாவாக செந்தாமரை நடித்து இருப்பார். அம்மாவாக பத்மஸ்ரீ நடித்து இருப்பார்.

இதுல வர்ற பத்மஸ்ரீ அம்மா சென்னையில் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்கள். அதுவும் 6 வருஷமா நடத்திக்கிட்டு வர்றாங்களாம். இதுபற்றி அவங்களே சொல்லும்போது நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது.


இந்த வயதிலும் அப்படி ஒரு வைராக்கியம். உழைப்பின் மேல் ஒரு ஆர்வம். சும்மா சோம்பி ஒரு மூலையில் உட்காராமல் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் உடலில் திடம் உள்ளவரை உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டீக்கடை நடத்தி வருவது பாராட்டுதலுக்கு உரிய விஷயம்தான்.

இதுகுறித்து அவங்க என்ன சொல்றாங்க பாருங்க... முன்னாள் நடிகை டீக்கடை நடத்துவதால் ஏதோ சாப்பாட்டுக்கு வழி இல்லாம கஷ்டப்படுகிறேன்னு நினைச்சிடாதீங்க.

கடவுள் புண்ணியத்தில் எங்கிட்ட எல்லா வசதிகளும் இருக்கு. வீட்ல சும்மா இருக்க பிடிக்கல. அதனால் தான் டீக்கடை நடத்துறேன் என்கிறார் அந்த அம்மா.

இந்தக்காலத்தில் சில இளையோர்களே வேலை வெட்டி இல்லாமல் தவறான வழிக்குச் செல்லும் வேளையில், வயதானாலும் உழைக்க வேண்டும் என்ற உந்துதலுடன் இருக்கும் இந்த அம்மாவைப் பார்த்தாவது போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் உழைக்க முன்வரும் வகையில் வரும் தலைமுறை திருந்த வேண்டும்.

Next Story