அது அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லையாம்... அதுக்கு பேரு என்ன தெரியுமா? ஷகீலா சொல்லும் டண்டனக்கா பதில்!
ஒரு கால கட்டத்தில் மலையாளப் படங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. இளைஞர்களை சுண்டி இழுத்து வலை வீசுவதில் வல்லவர். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். பாஸ் என்கிற பாஸ்கரன், மாஞ்சா வேலு, சிவா மனசுல சக்தி, அழகிய தமிழ் மகன்னு சில படங்களைச் சொல்லலாம்.சமீபத்தில் வலைதளங்களில் வைரலாகி வருகிறது நடிகை ஷகீலாவின் பேட்டி ஒன்று. அதுபற்றிய சுவையான விவரம் இது தான்.
நடிகை ஷகிலாவை ஆங்கர் பேட்டி காண்கிறார். 'நிறைய கிளாமரா நடிச்சிருக்க. அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போ ஷகிலா'ன்னு யாராவது கேட்டுருக்காங்களான்னு அவர் கேட்கிறார். அதற்கு 'நிறைய பேர் கேட்டுருக்காங்க. நான் அதை வந்து பெரிசு பண்ண மாட்டேன்.
என்னையும் கேட்டாங்க'ன்னு என்று அந்த வீடியோவில் தில்லாகச் சொல்கிறார் ஷகிலா. 'என்னை அப்படிக் கேட்டவங்கள்ல எனக்கு ஒருத்தரைப் புடிச்சிருக்கும். அவரை நான் ஓகே பண்ணிடுவேன். ஆனா அட்ஜெஸ்ட்மெண்ட் கிடையாது. நான் விருப்பப்பட்டுத் தானே போறேன்'னு அசால்ட்டாக அம்மணி பதில் சொல்கிறார்.
'அப்பாட...' என்று ஆங்கர் சொல்லி விட்டு பெருமூச்சு விடுகிறார். 'இப்போ புரிஞ்சிடுச்சி. அவங்க உங்களைக் கூப்பிட்டாங்கன்னா அது அட்ஜெஸ்ட்மெண்ட். நீங்க அவங்களைக் கூப்பிட்டா அட்ஜெஸ்ட்மெண்ட் கிடையாதுன்னு மீண்டும் அழுத்தமாகக் கேட்கிறார் ஆங்கர். அது எப்படி அட்ஜெஸ்ட்மெண்ட் ஆகும்? எனக்குப் பிடிச்சித் தானே போறேன்'னு சொல்றாரு ஷகிலா.
'நான் கூப்பிட்டு வந்துருக்காங்க. அப்படி வராம இருந்து அவன் வெளியே போய் சொல்லிட்டான்னா என்ன பண்ணுவீங்க'ன்னு கேட்கிறார். அதற்கு 'நான் கூப்பிட்டு வராம இருந்ததுல்ல'ன்னு சொல்றாரு. 'என்ன இப்படி வெளிப்படையா பேசிட்டீங்க'ன்னு ஆச்சரியப்படுகிறார் ஆங்கர்.
'நாம கூப்பிடற மாதிரி கூப்பிட்டா வருவாங்க என்று சொல்லும் ஷகிலாவிடம் எத்தனை பேரை கூப்பிட்டு இருக்கீங்க'ன்னு கேட்கிறார் ஆங்கர். அதற்கு 4ல் ஆரம்பித்து 10 பேர் வரை எண்ணுகிறார். 'எல்லாரையுமா கூப்பிட முடியும், ஹேண்ட்சம்மா இருக்கணும் அல்ல' என்று மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார் ஷகிலா.