2024ம் வருடம் தொடர் கஷ்டங்களை சந்தித்த சமந்தா!.. பொண்ணுக்கு இவ்வளவு சோதனைகளா!...
Actress samantha: சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் சமந்தா. சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் இருந்தது. மாஸ்கோவின் காவேரி என்கிற படம் மூலம் நடிக்க துவங்கினார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.
தமிழை விட தெலுங்கில் அதிகமாக நடித்த நடிகை இவர். அப்படி நடித்த போதுதான் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவுடன் காதல் வந்தது. சில வருடங்கள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். 2017ம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாகவே வலம் வந்தனர்.
ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை. இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். சமந்தா - நாக சைத்தன்யா இருவரும் பிரிந்தது சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. சமந்தாவை தவறாக பலரும் விமர்சித்தனர். சில மாதங்கள் மன உளைச்சலை சந்தித்தார் சமந்தார்.
ஒருபக்கம், தோல் வியாதியிலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார். ரசிகர்களும், திரையுலகினரும் அவருக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். ஆனாலும், திரைப்படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தவில்லை. சில படங்களில் நடித்தார். ஒருபக்கம் 2024ம் வருடம் அவருக்கு பல சோதனைகளை கொடுத்திருக்கிறது.
அவரின் முன்னாள் காதல் நாக சைத்தன்யா நடிகை சோபிதாவை காதலிக்கும் செய்து வெளியானது. அதோடு, இருவருக்கும் இடையே திருமணமும் நிச்சயிக்கப்பட்டு கடந்த 4ம் தேதி திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இதுபற்றி சமந்தா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், கண்டிப்பாக அவரின் மனம் புண்பட்டிருக்கும் என்றே கருதப்படுகிறது.
அதேபோல், 2024ம் வருடம் அவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை. ஹிந்தியில் அவர் நடித்த ஒரு வெப் சீரியஸ் மட்டுமே கடந்த நவம்பர் மாதம் வெளியானது. அதோடு, அவரின் அப்பா பிரபு சமீபத்தில் மரணமடைந்தார். இந்த சோகமும் சமந்தாவை தாக்கியது.
மொத்தத்தில், 2024ம் வருடம் சமந்தாவுக்கு சோதனையான ஆண்டாக அமைந்துள்ளது.