Samantha: என்னை பார்த்து சிரித்தார்கள்.. என் கஷ்டத்தை கொண்டாடினார்கள்.. கண்ணீர் மல்க பேசிய சமந்தா....
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சமந்தா. விஜயுடன் கத்தி, தெறி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு திரைப்படங்களில் நடித்த போது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக அது விவாகரத்தில் முடிந்தது.
ஒருபக்கம் சரும நோயாளும் சமந்தா பாதிக்கப்பட்டார். அதற்காக கடந்த சில வருடங்களாகவே அவர் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலப் பிரச்சினை காரணமாக கடந்த சில வருடங்களாகவே சமந்தா அதிக படங்களில் நடிக்கவில்லை.அவர் நடித்து வெளியான சில படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை.
தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார் சமந்தா. ‘ரக்த் பிரம்மந்த்’ என்கிற படத்திலும் இந்த படத்தில் நடித்து வருகிறார் மேலும் ‘மா இன்டி பங்காரம்’ என்கிற தெலுங்கு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

ஒருபக்கம் பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ராஜ் நிடுமோருவுக்கும், சமந்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டிருப்பதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வெளியானது. இதுபற்றி இருவருமே இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பேட்டி ஒன்றில் சமந்தா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
என் வாழ்க்கையில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். நான் கஷ்டத்தில் இருந்தபோது அதை சிலர் கொண்டாடினார்கள். எனக்கு மயோசிடிஸ் நோய் வந்தபோது என்னை கேலி செய்தார்கள்.. என் விவாகரத்தை சிலர் சந்தோஷமாக கொண்டாடினார்கள். இதையெல்லாம் பார்த்த போது ஆரம்பத்தில் என் மனதில் வலி உண்டானது. ஆனால் படிப்படியாக அதற்கெல்லாம் கவலைப்படுவதை நான் நிறுத்தி விட்டேன்’ என பேசி இருக்கிறார் சமந்தா.
