அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே!.. கீர்த்தி சுரேஷ்க்கு வாழ்த்து சொன்ன சமந்தா.. பழச மறக்கலையோ?..

by Ramya |
keerthi
X

keerthi 

Keerthi Suresh: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ரஜினிகாந்த் ஆகியோருடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர். தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடித்து இருக்கின்றார்.


தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறிய கீர்த்தி சுரேஷ் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாய்ப்பு குறைய பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு கீர்த்தி சுரேஷ் நடிகர் வருண் தவனுடன் இணைந்து பேபி ஜான் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படம் தமிழில் வெளியான தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடித்துக் கொண்டிருந்தபோது கவர்ச்சி காட்டாத கீர்த்தி சுரேஷ் பாலிவுட் என்ற பிறகு தாராளமான கவர்ச்சியில் நடித்திருக்கின்றார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான பாடலில் ஓவர் கிளாமராக நடித்திருப்பதை பார்த்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை நேற்று கோவாவில் இந்து முறைப்படி பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். நேற்று முழுவதும் சமூக வலைதள பக்கங்களில் இவரின் திருமண புகைப்படங்கள் தான் வைரலாகி வந்தது. தனது கல்லூரி தோழரான ஆண்டனி தட்டில் என்கின்ற தொழிலதிபரை கீர்த்தி சுரேஷ் கடந்த 15 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் நேற்று கோவாவில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களின் திருமணத்திற்கு நடிகர் விஜய் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இவரின் திருமண புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது சமூக வலைதள பக்கங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சமந்தாவின் வாழ்த்து:

நடிகை சமந்தா கீர்த்தி சுரேஷின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து இந்த புகைப்படம் என் இதயம் முழுவதும் நிறைந்து இருக்கின்றது. திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எப்போதும் என் அன்பும் வாழ்த்தும் உங்களுக்கு இருக்கும் என்று கூறி இருக்கின்றார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தாவிடம் பழைய ஞாபகம் வந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


ஏனென்றால் நடிகை சமந்தாவுக்கும் கோவாவில் தான் நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இந்து முறைப்படியும் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் சமந்தா கீர்த்தி சுரேஷின் திருமணம் புகைப்படத்தை பார்த்தவுடன் அவரின் திருமண ஞாபகம் வந்துவிட்டதா என்று ரசிகர்கள் அவரின் பதிவுக்கு கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

Next Story