நடிகைகள் செஞ்ச வேலை.. பலி ஆடா மாறிய சிம்பு.. உண்மையை சொன்ன பிரபலம்

by Rohini |
simbu
X

தமிழ் சினிமாவில் இப்போது ஒரு நம்பிக்கை மிகு நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிம்பு. விஜய் ஒரு பக்கம் அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். அஜித் இன்னொரு பக்கம் கார் ரேஸில் ஆர்வமாக இருக்கிறார். இவர்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவை அந்த ஒரு போட்டியில் கொண்டு போகக்கூடிய நடிகர்கள் யார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வருகிறது.

சிவாஜி எம்ஜிஆர் ரஜினி கமல் அஜித் விஜய் இவர்களுக்குப் பிறகு அடுத்து அந்த ஒரு போட்டியில் யாராக இருப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். அந்த இடத்திற்கு தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பல நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அதில் சிம்பு கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்பது பல ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது.

அந்த வகையில் சிம்புவின் லைனப்பில் அடுத்தடுத்து பல நல்ல இயக்குனர்களின் படங்களும் காத்திருக்கின்றன. ஆனால் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றன. தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமல் சிம்பு நடித்த திரைப்படம் தக் லைஃப். அந்த படம் தான் ரிலீஸ் ஆக இருக்கின்றது. அதன் பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் கால்ஷீட் கொடுத்து வைத்திருக்கிறார் சிம்பு.

ஆரம்பத்தில் ஒரு பிளேபாயாக லவ்வர் பாயாக கடுமையான விமர்சனத்திற்கு ஆளான ஒரு நடிகராக இருந்து வந்தார் சிம்பு. பல சர்ச்சைகள் அவரை சுற்றிக்கொண்டே இருந்தன. நடிகைகளுடன் கிசுகிசு என தொடர்ந்து அவர் மீது சர்ச்சைகள் இருந்து கொண்டே வந்தன. இந்த நிலையில் பிரபல கிளாமர் நடிகையான சோனா சிம்புவை பற்றி அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

சிம்பு ஒரு டார்லிங். அதையும் தாண்டி ஒரு பலியாடு என்று சொல்லலாம். ஆரம்பத்தில் அவருடைய வயதுக்கு அந்த மாதிரி சர்ச்சைகள் வந்தன. ஆனால் எல்லோருமே அந்த வயதில் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் சிம்பு எனும் போது சிம்பு சிம்பு என அவர் பெயரை மட்டுமே செய்திகள் வரும். நான் உட்பட அனைவருமே ஒரு பார்ட்டிக்கு செல்வோம். மறுநாள் காலையில் பத்திரிக்கையில் என்னுடைய புகைப்படம் மட்டும் பெரிய அளவில் போட்டு மட்டையாக கிடந்தார் என ஒரு செய்தி வரும்.


கேட்டால் நான் ஒரு பலியாடு. பெரிய பெரிய நடிகைகள் எல்லாம் அதிகமாக குடித்துவிட்டு மட்டையாகிக் கிடப்பார்கள் .நான் சும்மா உட்கார்ந்து இருப்பேன் .ஆனால் என்னுடைய புகைப்படத்தை பத்திரிகைகளில் போடுவார்கள். இப்படித்தான் சிம்புவையும் பலியாடாக மாற்றினார்கள். ஆனால் சிம்பு ஒரு வைரம் .அவர் கடைசி வரை நன்றாக இருக்க வேண்டும் என கடவுளிடம் நான் வேண்டிக் கொள்கிறேன் என சோனா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story