ஃபர்ஸ்ட் டைம் மணி இத பண்ணியிருக்காரு.. ‘தக் லைஃப்’ படம் பற்றி சுஹாசினி சொன்ன தகவல்

by ROHINI |   ( Updated:2025-05-17 08:31:06  )
suhashini
X
suhashini

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக்செல்வன், திரிஷா ,அபிராமி என பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

வரும் ஜூன் ஐந்தாம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்த படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கராக கமல் நடித்திருக்கிறார். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமல் மணிரத்தினம் இணையும் திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. அதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் படத்தை பெரிய அளவில் ப்ரோமோட் செய்து வருகிறார்கள்.

சிம்பு கமல் திரிஷா அபிராமி போன்றோர் ஒரு பல ஊர்களுக்கு சென்று படத்தை ப்ரோமோட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி தக் லைஃப் திரைப்படத்தை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது முதல் முறையாக மணி படத்தில் நடிப்புக்கும் பர்பாமன்ஸுக்கும் முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். கமலை பார்க்கும் பொழுது சிறு வயது சிவாஜியை பார்ப்பது மாதிரியும் சிம்புவை பார்க்கும் பொழுது சிறு வயது கமலை பார்ப்பது மாதிரியும் எனக்கு தோன்றியது என சுஹாசினி கூறி இருக்கிறார்.

மேலும் இதுவரை நான் கமலுடன் இணைந்து படத்தில் நடித்ததே இல்லை. ஒரு மகளாக, தோழியாக கூட நடித்ததில்லை. ரொமான்ஸ் பண்ணுவது மாதிரி நடிக்க முடியாது. இருந்தாலும் என் கெரியரில் கமலுடன் சேர்ந்துதான் நான் நடித்ததே இல்லை என சுஹாசினி கூறினார்.

Next Story