லப்பர் பந்து நடிகை காட்டுல மழைதான்.. பிச்சுகிட்டு கொட்டும் பட வாய்ப்பு.. அடுத்து இந்த நடிகருடனா?..

by Ramya |
swastika
X

swastika 

லப்பர் பந்து:

அறிமுக இயக்குனர் தமிழர் பச்சைமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வஸ்திகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டுக்கொடுத்த திரைப்படம் லப்பர் பந்து. சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக லப்பர் பந்து திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது.

நடிகை ஸ்வஸ்திகா:

இந்த திரைப்படத்தில் கெத்து தினேஷ் அவர்களுக்கு மனைவியாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருந்தார் நடிகை ஸ்வஸ்திகா. எர்ணாகுளத்தில் பிறந்து வளர்ந்தவரான இவர் தமிழில் வெளியான வைகை என்கின்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் விசாக என்கின்றதா பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மலையாள சினிமா பக்கம் சென்றார்.

அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்த வந்த இவர் மீண்டும் தமிழில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலமாக ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகச்சிறந்த வரவேற்பை கொடுத்து இருக்கின்றது. லப்பர் பந்து படத்தில் ஒரு திருமண வயது இருக்கும் பெண்ணுக்கு அம்மா கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றார் ஸ்வஸ்திகா. இதனால் தொடர்ந்து சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றது.


கொட்டும் பட வாய்ப்பு:

லப்பர் பந்து படத்தின் மூலமாக கிடைத்த வரவேற்பு காரணமாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்து வருகின்றது. அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் நடிகர் சூர்யாவின் 45 ஆவது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது அவருக்கு மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விலங்கு வெப் சீரியஸின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை போடப்பட்டது. இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

இப்படத்திற்கு மாமன் என்கின்ற பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சூரியின் தங்கை கதாபாத்திரத்தில் ஸ்வஸ்திகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. மேலும் ஐஸ்வர்யா லட்சுமி இந்த திரைப்படத்தில் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க இருக்கின்றார். அண்ணன் தங்கைக்கு இடையே இருக்கும் பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் ஸ்வஸ்திகா இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Next Story