படத்தோட உண்மையான வில்லன் இவங்கதான்!.. செம டுவிஸ்ட்.. லீக்கான விடாமுயற்சி சீன்..!
Vidamuyarchi: அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகிவிட்டது. காலை முதலே அஜித் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என்று விடாமுயற்சி திரைப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் எந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகாததால் இன்று வெளியான விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனைத்து திரையரங்குகளிலும் ஏகபோக வரவேற்புதான்.
விடாமுயற்சி ரிலீஸ்: இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கின்றார். படம் தமிழகத்தில் மட்டும் 1000 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கின்றது.
விடாமுயற்சி விமர்சனம்: இன்று வெளியான விடாமுயற்சி திரைப்படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது. ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் அஜித்தின் நடிப்பை கொண்டாடி வருகிறார்கள். மேலும் படம் பட்டாசாக இருக்கின்றது என பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் மாஸ் நடிகரான அஜித் இப்படி நடிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
படத்தின் இரண்டாம் பகுதி ரொம்பவும் ஸ்லோவாக இருக்கின்றது. ஸ்கிரீன் பிளே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. அனிருத் இசை மட்டும் இல்லை என்றால் படம் மொத்தமும் வேஸ்ட் என்கின்ற அளவிற்கு தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இன்று முதல் தினம் என்பதால் அஜித் ரசிகர்கள் படத்தை பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்களை கூறிவரும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் உண்மையான விமர்சனம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வில்லி திரிஷா: விடாமுயற்சி திரைப்படம் பிரேக் டவுன் என்கின்ற திரைப்படத்தின் தழுவல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். அந்தப் படத்தின் கதையை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் அஜித்துக்கு மனைவியாக த்ரிஷா நடித்திருக்கின்றார். படத்தில் திரிஷாவுக்கு கருச்சிதைவு ஏற்படுகின்றது. இதனால் அஜித்துக்கும் திரிஷாவுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை விவாகரத்து வரை செல்கின்றது.
அந்த சமயம் பார்த்து திடீரென்று திரிஷா காணாமல் போய்விடுகின்றார். அவரை தேடி அலையும் அஜித்தை ஒரு சிலர் கொலை செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். அஜித்தை கொல்ல சொன்னது யார் என்பது படத்தின் முதல் பகுதியின் ட்விஸ்டாக அமைகின்றது. அப்போது அஜித்தை கொல்ல சொன்னது த்ரிஷா தான் என்பது தெரிய வருகின்றது. இதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றார்.
கதையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது. திரிஷாவை அஜித் கண்டுபிடித்தாரா? இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் கதை. நடிகை திரிஷா ஏற்கனவே கொடி திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து மீண்டும் இந்த திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருப்பது தற்போது ரிவில் ஆகி இருக்கின்றது.