விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் குறித்து அப்படி சொன்ன விந்தியா... இது மட்டும்தானா இன்னும் இருக்கா?

நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடிகை விந்தியாவிடம் இன்றைய முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து ஓரிரு வரிகளில் சொல்லுமாறு கேட்கிறார். அதற்கு பட் பட்னு கவிதை வடிவில் பொளந்து கட்டுகிறார் விந்தியா. என்ன சொல்கிறார்னு பாருங்க.

விஜயைப் பற்றிக் கேட்கும்போது, தாளம் தப்பாம ஆடத் தெரிஞ்சவர். ரசிக்கிறதுக்கு ஏற்ப ஆடத் தெரிஞ்சவர். இன்னைக்கு இருக்குற இளைஞர்களுக்குத் தளபதி. முக்கியமா துண்டு சீட்டு இல்லாமலேயே பேசக்கூடிய தளபதி.

அஜீத் என்றதுமே, தகுதி இருக்குறவங்களுக்குத் தலைவணங்கறதுக்குத் தயங்க மாட்டாரு. தப்புன்னு தெரிஞ்சா எதிர்க்கறதுக்குத் தயங்கமாட்டாரு. மலை மாதிரி. தலை எப்பவுமே மலை.

சிம்புன்னு பேரைச் சொன்னதும், சகலகலா வல்லவனின் மகன். ஆனா என்ன பண்றது? என் தம்பிக்கு எப்பவுமே ஏதாவது ஒரு தொல்லை வரும். தனுஷ் என்றதுமே அவர் ஒரு அசுரத்தனமான திறமை கொண்டவர்னும் நினைவூட்டுகிறார். தொடர்ந்து புல்லு போல மொளைச்சாருன்னு நினைச்சவங்களுக்கு ஆலமரமா பறந்து நின்னு நிரூபிச்ச ஒரு உண்மையான உழைப்பாளி.

திரிஷாவைக் குறித்து சொன்னால், 20 வருஷமா இளமையாகவே இருக்குற ஒரு சிறந்த நடிகை. நயன்தாரா என்றதுமே, வலிகள் எல்லாத்தையும் வழிகளா மாற்றி தன்னை எதிர்த்தவங்களை ஏறி மிதிச்சி ஜெயிச்சி தைரியமா நிக்கிற கேரளா தந்த ஒரு தைரிய லட்சுமி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


குஷ்பூவைப் பற்றிப் பேசும்போது மனசுல பட்டதைப் பேசுறவங்க. என்னுடைய அன்பான தோழி. வலிகள் ஆயிரம் இருந்தாலும், வெளியில தெரியாம மறைச்சு வாழற புன்னகை அரசி என்கிறார். மீனாவைப் பற்றிச் சொல்லும்போது குழந்தைத்தனமும் அப்பாவித்தனமும் மாறாம இன்னும் பாப்பாவாவே வாழற ஒரு பெஸ்ட் ப்ரண்டு.

ஜெயலலிதாவைப் பற்றி சொல்லும் போது எனக்கு முகவரி தந்த கடவுள் என்று நச்சென்று சொல்லி முடிக்கிறார் விந்தியா. ஆனால் ஒரு நடிகை பேரைச் சொன்னதுமே டக் டக்னு கம்ப்யூட்டர் மாதிரி கவிதைகளை மழையாகப் பொழிவது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

Related Articles
Next Story
Share it