அஜீத் மாதிரி புருஷன் வேணும்னு ஆசைப்பட்ட நடிகை... இப்பதானே விஷயம் தெரியுது...!

by sankaran |   ( Updated:2024-10-19 03:30:54  )
Ajithkumar
X

அஜீத் நடிக்க வந்த புதிதில் ரொம்ப கியூட்டா இருப்பாரு. வயசுப் பொண்ணுங்க யாராக இருந்தாலும் அவரைப் பார்த்துக்கிட்டே தான் இருப்பாங்க. அந்த மாதிரி அவங்களுக்கு மனசுக்குள்ள ஒரு கிளர்ச்சி வந்துவிடும். இப்போ பார்த்தா கூட அதே மாதிரி ஹேண்ட்சம்மா தான் இருக்காரு.

அந்த விஷயத்துல நடிகை ஷாலினி ரொம்பவே கொடுத்து வச்சவங்கன்னு சொல்லலாம். அமைதியாகவும், தன்னடக்கத்தோடும், தனி வழியோடவும் திரையுலகில் கோலோச்சி வருகிறார் அஜீத்.

அவரை அந்தக் காலகட்டத்தில் பார்த்த நடிகை ஒருவர் அவரை மாதிரி புருஷன் கிடைக்கமாட்டானா என ஏங்கியுள்ள கதையும் நடந்துள்ளது. அந்த நடிகை வேறு யாருமல்ல. மந்த்ரா தான். அவர் அஜீத் பற்றி என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...


ஆசை படத்துக்கு தெலுங்குல சுவலட்சுமிக்கு டப்பிங் பேச கூப்பிட்டாங்க. ஆனா வாய்ஸ் பொருத்தமா இல்லை. அப்போ தான் பெரிய ஸ்க்ரீன்ல அஜீத்தைப் பார்த்தேன். அடடா சின்ன ஒரு மனசுல க்ரஷ் வந்தது. எல்லா பொண்ணுக்கும் இருக்கும்.

இப்ப கூட இருக்கலாம். நாங்க வந்து அந்த ஏஜ்ல அடடா இப்படி ஒரு புருஷன் கிடைச்சா நல்லாருக்குமேன்னு... நினைச்சோம். ஷாலினி பார்த்து கோபப்படப் போறாங்க.

சூட்டிங் போகும்போது கூட ப்ரைட்டா ஒயிட் கலர்ல இருப்பாரு. அவரைப் பார்த்துக்கிட்டே இருப்பேன். அவரு பார்த்தாருன்னா நான் பார்க்க மாட்டேன். அந்த மாதிரி பார்த்துக்கிட்டே இருக்கணும்னு சில ஃபேஸ் தோணும். அதுல ஒண்ணு வந்து டெபனைட்டா அஜீத் என்கிறார் மந்திர நடிகை என்று அழைக்கப்படும் மந்த்ரா.

1997ல் அஜீத்துக்கு ஜோடியாக மந்த்ரா ரெட்டை ஜடை வயசு என்ற படத்தில் நடித்தார். சிவக்குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவா இசை அமைத்துள்ளார். கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். அஜீத் நடித்த ஆசை படம் தான் அவரைத் தமிழ்த்திரையுலக ரசிகர்களை ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்தப் படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். படத்தில் அஜீத் அவ்வளவு கியூட்டா இருப்பார். நடிப்பும் பிரமாதமாக இருக்கும். 1995ல் வசந்த் இயக்கத்தில் நடித்த அந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. தேவாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்தான்.

Next Story