×

அட கண்டிராவியே... இரண்டாம் குத்து பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. முகம் சுளித்த ரசிகர்கள்?

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து அடல்ட் காமெடி படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது. 
 

சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து அடல்ட் காமெடி படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது.

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார் சந்தோஷ் ஜெயகுமார். இரண்டாம் பாகத்திற்கு இரண்டாம் குத்து என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை ச்சீ என்று தான். ச்சீ கருமம். என்ன தான் அடல்ட் காமெடி படமாக இருந்தாலும் இப்படியா புகைப்படம் வெளியிடுவது?. இது அடல்ட் காமெடி படம் என்று சொல்வதற்கு பதிலாக அந்த மாதிரி படம் என்று நேரடியாக சொல்லிவிட வேண்டியது தானே.


ஒரு சிலரோ, போஸ்டரே செமயாக இருக்கு, படம் வேற லெவலில் இருக்கும் போன்று என்று கூறியுள்ளனர். இரண்டாம் குத்து படத்தில் நடிக்க பல ஹீரோக்கள் தயங்கியதால் தானே நடித்துள்ளதாக சந்தோஷ் ஜெயகுமார் முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News