AK64: லோகேஷ் எடுத்த அதே ரிஸ்க்கை எடுக்கும் ஆதிக்!.. கூலி ரிசல்ட் தெரிஞ்சும் இப்படியா?…
AK64: குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் ஒரு படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி ஏற்கனவே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு 300 கோடி பட்ஜெட் என்பதால் சரியான தயாரிப்பாளர் கிடைக்காமல் இருந்தது, ஏனெனில் அஜித்துக்கே 180 கோடி சம்பளம் என்பதால் லைக்கா, சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களே இப்படத்தை தயாரிக்க முன்வரவில்லை.
அதன்பின் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரிக்க முன் வந்ததாக செய்திகள் வெளியானது. இப்படத்திற்கு சம்பளமாக வாங்காமல் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளை தனக்கு கொடுக்குமாறு அஜித் கேட்டிருப்பதாக சொல்லப்பட்டது. அஜித் இப்போது கார் ரேஸில் இருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.
அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகும் இந்த புதிய படம் துறைமுகம் தொடர்பான கதை என சொல்லப்படுகிறது .துறைமுகம் என்றாலே கண்டிப்பாக வில்லன் குரூப் சட்டவிரோதமாக எதையாவது கடத்துவார்கள். அதை ஹீரோ தடுப்பார் என்றுதான் கதை வரும். இந்த படத்திலும் அந்த மாதிரிதான் காட்சிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கிய கூலி திரைப்படமும் ஹார்பர் தொடர்பான கதைதான்.
எப்போதுமே அரசுக்கு சொந்தமான அல்லது அரசு நடத்தும் நிறுவனங்கள் தொடர்பான விஷயங்களை தவறாக காட்டினால் சென்சாரில் A சான்றிதழ் கொடுக்கிறார்கள். கூலி படத்திற்கு அப்படித்தான் A சான்றிதழ் கிடைத்தது. அதனால்தான் அந்த படம் அதிக வசூலையும் பெறவில்லை. ஏனெனில் பலராலும் குடும்பத்துடன் சென்று படத்தை பார்க்க முடியவில்லை. படத்தின் வசூலை இது கடுமையாக பாதித்தது.
அது போலவே, ஆதிக் ரவிச்சந்திரனும் கதையை உருவாக்கினால் கண்டிப்பாக சென்சார் போர்ட் படத்திற்கு A சர்டிபிகேட் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி கொடுத்தால் கூலி படம் சந்தித்த அதே பிரச்சினையை அஜித் படமும் சந்திக்கும் என கணிக்கப்படுகிறது.
